ஆர்மேக்ஸ் கணக்கெடுப்பில் நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. இவர் தற்பொழுது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஷாருகானின் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட ஆர்மேக்ஸ் மீடியாவின் பிரபலமான தமிழ் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அந்த பட்டியலின் புகைப்படம் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

முதல் இடத்தில் நயன்தாரா!!… ஆர்மேக்ஸ் கணக்கெடுப்பின் லிஸ்ட் வைரல்!.

மேலும் அப்பட்டியலில் நயன்தாராவை தொடர்ந்து 2வது இடத்தில் நடிகை சமந்தா, 3வது இடத்தில் திரிஷா, 4வது இடத்தில் கீர்த்தி சுரேஷ், 5வது இடத்தில் பிரியங்கா மோகன், 6வது இடத்தில் தமன்னா, 7வது இடத்தில் ஜோதிகா, 8வது இடத்தில் அனுஷ்கா, 9வது இடத்தில் சாய் பல்லவி மற்றும் 10வது இடத்தில் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.