அருண் விஜய்யின் மகன் அர்ணவ் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஓ மை டாக்.
Oh My Dog Movie Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய்யின் மகன் அர்ணவ் அருண் விஜய் அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் ஓ மை டாக். இந்த படத்தை சரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா என்பவர் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைக்களம் :
அருண் விஜய் தன்னுடைய மனைவி மகிமா, மகன் அர்ணவ் அருண் விஜய், மற்றும் தன்னுடைய தந்தை விஜயகுமார் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறார். பள்ளியில் படித்து வரும் இவருடைய மகன் கண் பார்வையற்ற ஒரு நாய்க்குட்டியை தூக்கி வந்து அதற்கு சிம்பா என பெயர் வைத்து வளர்க்கிறார். அர்ணவ் கொடுக்கும் பயிற்சியால் திறமையான நாயகம் வளர்கிறது சிம்பா. பிறகு அதற்கு கண்பார்வை பெற வைத்து நாய் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ள வைக்கிறார்.
இந்தப் போட்டியில் தன்னுடைய நாய் தான் ஜெயிக்க வேண்டும் என சிம்பாவிற்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார் பணக்கார வில்லனான வினய். இதையெல்லாம் தாண்டி சிம்பா எப்படி ஜெயித்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் குழந்தையையும் செல்லப்பிராணியை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் குழந்தைகள் ரசிக்கும் வகையில் உள்ளது. பெரிய அளவில் அலட்டல் இல்லாமல் சரியான பாதையில் படத்தைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் சரோவ் சண்முகம்.
அறிமுக நடிகர் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய்யின் மகன் அருண் அர்ணவ். படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் தனது மகனுக்காக நடித்துள்ளார் அருண்விஜய். மகிமா நம்பியார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பாசமான அம்மாவாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அருண் விஜய்யின் அப்பாவாக அர்ணவ் தாத்தாவாக மிகவும் எதார்த்தமான நடிப்பை கொண்டு வந்துள்ளார் விஜயகுமார். ஊட்டியின் அழகை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.