Bigil Release Date
பிகில் படத்தின் தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி என்ன என்பதை இதுவரை படக்குழு சொல்லாமல் இருந்து வந்தது.

இன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் இப்படத்தின் தயாரிப்பாளர் பிகில் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார்.

அவர் கூறியபடியே பிகில் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார், ஆம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வாக கூறியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.