NSK Ramya
NSK Ramya

சத்தமில்லாமல் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் பிக்பாஸ் ரம்யா.

NSK Ramya Blessed With Baby : தமிழ் சினிமா திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்எஸ்கே ரம்யா. இந்த நிகழ்ச்சியின் பிறகு பல படங்களில் பாடத் தொடங்கிய இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ரம்யா சீரியல் நடிகர் சத்யா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக இவர் உடல் எடை கூடி குண்டாக இருந்தார். இதனால் பலரும் அவரிடம் ஏன் குண்டாகி விட்டீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அர்ஜென்ட்.. உடனே A நெகட்டிவ் இரத்தம் வேணும்.. கவினின் பதிவால் உடனே ஓடிச் சென்று உதவிய ரசிகர் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அமைதியாக கடந்து வந்த ரம்யா தற்போது குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது நான் கர்ப்பமாக இருந்தேன். அதனால் தான் உடல் எடை கூடியிருக்கும் தற்போது எனக்கு குழந்தை பிறந்து விட்டது. இனிமேல் ஒர்க் அவுட் செய்து என்னுடைய உடல் எடையைக் குறைப்பேன் என பதிவிட்டுள்ளார்.