Bigg Boss Kavin Fans Help
Bigg Boss Kavin Fans Help

ஏ நெகட்டிவ் இரத்தம் கேட்டு கவின் ட்வீட் ஒன்றை பதிவிட அவரது ரசிகர் ரத்தம் கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Bigg Boss Kavin Fans Help : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகராகவும் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்தவர் கவின்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் கவின் ஒருவருக்கு ஓ நெகட்டிவ் இரத்தம் தேவைப்படுவதாக பதிவிட்டிருந்தார்.

இருப்பதிலேயே மிகப் பெரிய வியாதி இதுதான் – உருக்கமாக பதிவிட்ட இயக்குனர் செல்வராகவன்!

நடிகர் கவினின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஓடோடிச் சென்றுள்ளார்.

இது குறித்து கவின் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க அந்த ரசிகருக்கு கவின் நன்றி கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.