
நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை ஆளுநர் மாளிகை பொருத்துகொள்ளாது.
மேலும், நக்கீரன் இதழில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது. மதுரை காமராஜர் விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கவில்லை.
தவறான கருத்துகளை நாட்டின் முதல் குடிமகனான ஆளுநர் மீது சுமத்தியுள்ளனர். உண்மையை அறிந்து கொள்ளாமல் ஒருசிலர் அதை ஆதரிக்கிறார்கள்.
ஆளுநரையோ, செயலாளரையோ நிர்மலா தேவி சந்திக்கவில்லை. கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநரை சந்திக்கவில்லை, மேலும் ஆளுநரின் மதுரை பயணத்தின் போது, செயலாளர் உடன் வரவில்லை.
மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.