NGK Box Office Collection Improves, Suriya, Rakul Preet Singh, Sai Pallavi, Yuvan Shankar Raja, Selvaraghavan, Praveen K. L.
NGK Box Office Collection Improves

NGK Box Office Collection Improves

முதல்நாளில் சென்னையில் இப்படம் 1 கோடியே 3 லட்சம் வசூல் செய்தது. இரண்டாம் நாளில் 1 கோடியே 7 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் விமர்சனங்கள் இப்படத்தின் வசூலை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல் நாள் வசூலில் சாதனை படைத்த என்.ஜி.கே – சூர்யா ரசிகர்கள் செம கொண்டாட்டம்!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் வசூலைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பு இருந்ததால் இப்படத்தின் ஓபனிங் நன்றாகவே வந்துள்ளது.

முதல்நாளில் சென்னையில் இப்படம் 1 கோடியே 3 லட்சம் வசூல் செய்தது. இரண்டாம் நாளில் 1 கோடியே 7 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் விமர்சனங்கள் இப்படத்தின் வசூலை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.