NGK 25 crore loss | Suriya | Sai Pallavi | Rakul Preet Singh | Selvaraghavan | Yuvan Shankar Raja | Sivakumar Vijayan | Praveen K. L.
NGK 25 crore loss

தமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது இதனால் இப்படத்தை தயாரித்த எஸ்.ஆர். பிரபுவிற்கு ரூ. 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது

NGK 25 crore loss – செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

என்.ஜி.கே படத்தின் ஒட்டுமொத்த வசூல் இவ்வளவு தானா? முழு வசூல் விவரம் உள்ளே!

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

இது வசூலிலும் பாதித்துள்ளது முதல்வார இறுதியில் உலக அளவில் இப்படம் 50 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்துள்ளது இதில் தமிழகத்தில் இப்படம் வெறும் 28 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதனால் இப்படத்தை தயாரித்த எஸ்.ஆர். பிரபுவிற்கு ரூ. 25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது எனினும் அவர் சூர்யாவின் உறவினர் என்பதால் அடுத்தடுத்த படங்களில் சூர்யா அவருக்கு நஷ்ட ஈடை சரி செய்வார் என கூறப்படுகிறது.