மாதம்பட்டி ரங்கராஜ் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
நான்கு சீசன்களாக தொடர்ந்திருந்த செஃப் வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் விலகினார். அவருக்கு பதிலாக செஃப் தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது.
அது குறித்த தகவல் ஒன்றில், மிஸ் மேகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் மெஹந்தி சர்க்கர்ஸ் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.