இனியாவிற்கு சப்போர்ட்டாக கோபி பேச பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் ஆட குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். இருந்தாலும் மத்தவங்க ஆடுறத நம்ம டிவில பார்க்கிற மாதிரி தானே என்று ஜெனி சொல்ல மத்தவங்க ஆடும் போது நம்ம என்ன எல்லாம் பேசுறோம் அது மாதிரி தானே பேசுவாங்க என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.
உடனே பாக்யா படிக்கிற வேலைய பாரு இதுக்கு டிவில முகம் தெரிய ஆரம்பிச்சா படிப்பு மேல கவனம் இருக்காது நான் அப்படி நிறைய பேர நான் பார்த்திருக்கேன். அதனால நீ படிச்சிட்டு நீ எங்க வேணா டான்ஸ் ஆடு என்று சொல்லுகிறார். ஈஸ்வரியும் பாக்யாவும் முடிவில் உறுதியாக இருக்க இனியா சோகமாக இருக்கிறார். உடனே கோபிக்கு போன் போட்டு நான் உங்கள பாக்கணும் டாடி என்று சொல்லுகிறார் கோபிக்காக வெளியே காத்துக் கொண்டிருக்க கோபி வந்தவுடன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல கோபி வீட்டுக்கு போலாம் வாடா என்று சொல்லுகிறார் இனிய மறுத்தும் பரவால்லவா என்று கூட்டி சொல்கிறார்.
இனியா ராதிகாவை பார்த்து உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து என்ன விஷயம் என்று கேட்கிறார்.அதற்கு இனியா நான் இங்கே எல்லாம் தங்கிடமாட்டேன் டாடி கூப்டா இருந்தா வந்தேன் நான் உடனே சொல்லிட்டு போயிடுவேன் என்று சொன்ன அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை நீயா நீங்க தங்கனாலும் எங்களுக்கு சந்தோஷம்தான் என்ன ராதிகா என்று கேட்க ஆமா கோபி என்று சொல்லுகிறார்.
உடனே இனியா காலேஜில் நடந்த டான்ஸ் காம்படிஷன் பத்தியும், அதில் ஜெயித்த விஷயத்தையும் கோபியிடம் சொல்லுகிறார். உடனே கோபி சந்தோஷப்பட சூப்பர் டா என்று பாராட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் இரண்டு மாதம் இந்த ஷோ நடக்கும் என்று சொல்ல அதற்கு ராதிகா நெறைய பிராக்டிஸ் பண்ணனும்ல என்று சொல்லுகிறார். ஆமாம் என்று இனியா சொல்ல உடனே கோபி ரெண்டு மாசத்துக்கு படிப்பு என்ன ஆகிறது என்று கேட்க இனியா உடனே நீங்களும் பாட்டி அம்மா மாதிரி பேசாதீங்க டாடி என்று கோபப்பட்டு எழுந்து செல்லுகிறார். அவரை தடுத்து நிறுத்தி உட்கார வைத்து காம்பெடிஷன்க்கு கலந்து போக உனக்கு புல் சப்போர்ட் நான் பண்ற என்று சொன்ன இனிய சந்தோஷம் அடைகிறார் நிஜமாவா டாடி என்று கேட்க நிஜமாதான் சொல்றேன் என்று உறுதி கொடுக்கிறார்.
பாக்கியா வீட்டில் இனி அவை தேட ஜெனி மேல இருக்காளா இல்லையா என்று கேட்கிறார் இல்ல ஆன்ட்டி மேல இல்ல, பாட்டி ரூம்ல இருக்காங்களா பாருங்க என்று சொல்ல அங்க போய் பார்க்க அங்கேயும் இனியா இல்லை. உடனே பதறிப்போன பாக்யா தோல் ஒருவருக்கு போன் பண்ண அங்கேயும் வரவில்லை என்று சொல்லுகின்றனர். வெளியே வந்து பார்த்துக் கொண்டிருக்க கோபியுடன் இனிய வருகிறார். பாக்யா பார்த்து ஷாக்காகி நிற்கிறார்.
கோபி என்ன சொல்லப் போகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.