Next Song Update From Jail Movie : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன்பின் இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் வசந்தபாலன் உடன் இணைந்து ஜெயில் என்ற படத்தில் நடித்தும் இசையமைத்துள்ளார்.

ஜெயில் படத்தில் ஜிவி உடன் அபர்நதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே.. தல 61 பற்றி தீயா பரவும் தகவல் – இயக்குனர் இவர் தானா?

கடந்த மாதம், இப்படத்திலிருந்து வெளியான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடலாசிரியர் கபிலன். இசையமைப்பாளர் ஜிவி இசையில் தனுஷ் மற்றும் அதிதி ராவ் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தனர்.

தற்போது ஜெயில் படத்தின் அடுத்த பாடல் பற்றிய அறிவிப்பைத் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஜிவி. இந்தப்பாடல் நண்பர்களைப் பற்றிய பாடல் என்றும், இந்தப் பாடலை மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ பாடலை எழுதிப் பாடியிருந்த அறிவு, இந்தப் பாடலையும் எழுதி உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த பாடலை எழுதிய அறிவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நட்பைப் பற்றிய பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜிவியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அடுத்த பாடல் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.