Ajith 61 Director Details
வலிமை படத்தை தொடர்ந்து தல 61 இயக்குனர் யாராக இருக்கும் என்ற பேச்சு கிளம்ப தொடங்கியுள்ளது.

Thala 61 Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்க போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அது பற்றிய தகவல் கசிய தொடங்கியுள்ளது.

அத்தனை முன்னணி நடிகர்கள் இருந்தும் அஜித்திற்கு சவால் விட்ட விவேக் – எதிர்கொள்வாரா தல?

அஜித்தை வைத்து வரலாறு படத்தை இயக்கிய கே. எஸ் ரவிகுமாருடன் அஜித் கூட்டணி அமைக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் காரணமாக இது பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

உண்மை என்ன கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்குநரா என்பது அறிவிப்பு வந்தால் தெளிவாக தெரிந்து விடும். சில மாதங்களுக்கு முன்னரும் இப்படி ஒரு தகவல் கிளம்பி கே.எஸ் ரவிக்குமார் அதனை மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.