எதிர்நீச்சல் சீரியலுக்கு டஃப் கொடுக்க உள்ளது புதிய சீரியல்.

தமிழ் சின்னத் திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை திருச் செல்வம் இயக்கி வருகிறார்.

டிஆர்பிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமாம் மெட்டி ஒலி நாதஸ்வரம் என மாபெரும் வெற்றி சீரியல் கதை கொடுத்த திருமுருகன் அவர்கள் செல்வம் என்ற பெயரில் புதிய சீரியலை இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஸ்ருதி ராஜ் நாயகியாக நடிக்க உள்ள இந்த சீரியல் சன் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது.

திருமுருகனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தான் எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம். ஆகையால் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது‌.

வெகுவிரைவில் இந்த செல்வம் சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.