நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் காலை வணக்கம் கூறி அழகான புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக தொடங்கி சின்னத்திரை சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையிலும் அறிமுகமானார். அப்பிடத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அருண் விஜயின் யானை, தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அழகான மாடன் உடையில் பில்டர் எதுவும் இல்லாமல் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “குட் மார்னிங்” என்ற கேப்ஷனை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு பலரும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.