New Schemes Opening in Tamilnadu

தமிழகம் முழுவதும் ரூ165 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்த வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க

New Schemes Opening in Tamilnadu : சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் இந்த மையத்தை அவர் திறந்து வைத்தார். மேலும், சென்னை நொளம்பூர், பெரம்பலூரில் கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு 5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார். இதனையடுத்து, வாணியம்பாடியில் 20 கோடியே 37 லட்சம் ரூபாயில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

மேலும் 165 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 4.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள
இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் – நிலை ஐஐ-ன் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசிற்குமிடையே 50:50 விகிதாசார பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக 1 கோடி ரூபாயும், தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக காவேரி மருத்துவமனையின் 1 கோடி ரூபாய் பங்களிப்புடன், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக, இலாப நோக்கமற்ற நிறுவனமாக சென்னை, கிண்டியில், அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இம்மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடு மற்றும் உள்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தின் மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய வேலைவாய்ப்பினை அவர்கள் பெற உறுதி செய்வதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் இம்மையத்துடன் ‘World Health Organization’ எனப்படும் ‘உலக சுகாதார அமைப்பும்’ கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய COVID19 நோய் தொற்றால் ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து covid19 தொற்று தொடர்புடைய பயிற்சி பாடதிட்டத்தினை தொடங்குகிறது.

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் – நிலை ஐஐ-ன் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசிற்குமிடையே 50:50 விகிதாசார பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பங்காக 1 கோடி ரூபாயும், தொழில் நிறுவன கூட்டமைப்பின் சரிசமப் பங்காக, சரக்கு நகர்வு மேலாண்மைக்கான துறை திறன் குழுமத்தின் 1 கோடி ரூபாய் பங்களிப்புடன், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக இலாப நோக்கமற்ற நிறுவனமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். இம்மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.11.2019 அன்று நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில், தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில், வாணியம்பாடியில் புதிய பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் 20 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையில் 13.12.2013 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மதுரவாயல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்கள்.

அதன்படி, சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், நொளம்பூரில், 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 4.11.2020 அன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை, டாக்டர் தங்கராஜ் சாலையில் அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தொழிற்கூடங்கள் சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.