வானத்தைப்போல சீரியலில் புதிய சின்ராசு சூட்டிங் ஸ்பாட்டில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

New Chinrasu in Vaanathai Pola Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் வானத்தை போல. இந்த சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா விலகிக் கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக புதிய நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தோடு இருந்த பிரச்சினை காரணமாக இவர் விலை கொண்டதாக சொல்லப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வந்த தமன் குமாரும் விலகிக் கொண்டதாக சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்றார்போல சீரியலில் அவர் காணாமல் போனது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சின்ராசு கதாபாத்திரத்தில் இனி யாரடி நீ மோகினி சீரியல் புகழ் ஸ்ரீ நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

கோவிந்தா என்றால் என்ன பொருள்.?

தற்போது அவர் வானத்தைப்போல சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய சின்ராசுவாக சீரியலில் தொடர உள்ள இவர் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு பொருந்துவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

#ரைட்டர் படம் எப்படி இருக்கு? இது மக்கள் கருத்து! #writer public review

https://www.instagram.com/p/CXyi30iPFAc/?utm_source=ig_web_copy_link