குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் புது நடுவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன் முடிவடைந்து உள்ள நிலையில் விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு தாமு மட்டும் வெளியிட்டிருந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார்.
இந்த நிலையில் அவர் அடுத்த சீசனில் நடுவராக தொடர்வார் என தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி அவருடன் புதிய நடுவராக நடிகரும் செஃப்புமான சுரேஷ் அவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.