Nerkonda Paarvai
Nerkonda Paarvai

Nerkonda Paarvai :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளிவராவிட்டாலும் அன்றைய தினம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக டீசர் அல்லது சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

சூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி!

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி அன்று எந்த அப்டேட்டும் வராதாம்.

மிஞ்சி போனால் அஜித்தை வாழ்த்தி ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.