NGK Vs DEVI 2

NGK Vs DEVI 2 : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?

இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து இப்படம் சோலோ ரிலீஸாக இருக்கும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்கு போட்டியாக வேறொரு படமும் வெளியாகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம்தான் தற்போது என்.ஜி.கே-வுடன் மோதுகிறது.

முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.

மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.