Nerkonda Paarvai Celebration Issue : Theater Owner Announcement | Thala Ajith | Ajith kumar | H Vinoth | NKP Movie Updates
அஜித் படத்தால் இனி தமிழ் படங்கள் ரிலீஸ் இல்லை என அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார் பிரபல திரையரங்க உரிமையாளர்.

Nerkonda Paarvai Celebration Issue : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார்.

இந்த படம் பிரான்ஸ் நாட்டில் லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற தியேட்டரில் வெளியானது. இதுவரை இங்கு சில குறிப்பிட்ட தமிழ் படங்கள் மட்டும் தான் ரிலீசாகி இருந்தன.

கமல்ஹாசனின் ஹிட் பாடலை அழகாக பாடலை பாடும் தளபதி விஜய் – கமல்ஹாசன்60 ஸ்பெஷல் வீடியோ.!

இந்த படம் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பு ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக இருந்துள்ளனர். திடீரென சில ரசிகர்கள் விளையாட்டாக ஸ்க்ரீனில் மீது சாய ஸ்க்ரீன் கிழிந்துள்ளது.

இதற்காக விநியோகிஸ்தர் தரப்பும் நஷ்ட ஈடு கொடுத்துள்ளது, இருப்பினும் அஜித் ரசிகர்களின் இந்த செயல்பாட்டால் தியேட்டர் உரிமையாளர் இனி எந்த தமிழ் படமும் இங்கு ரிலீஸ் இல்லை என அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.