நெல்சன் திலிப் குமாரின் மனைவி மற்றும் மகனுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வளம் பெறுபவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

பின்ன தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வெற்றி தோல்வியே நெல்சன் திலீப் குமாரின் திரையுலக வாழ்க்கையை நிர்ணயிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

ஆகையால் நெல்சனும் ஜெயிலர் படத்தின் மீது அதிக கவனத்தை செலுத்தி இயக்கி வருகிறார். இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் அவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அழகான மனைவி மற்றும் மகனுடன் நெல்சன் திலீப்குமார் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கானா என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.