Neeya Naana Gopinath

நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Neeya Nana Gopinath Brother Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த விவாத நிகழ்ச்சி தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத்.

ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளில் பேசியுள்ளார். இவருடைய பேச்சுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிறகு வெள்ளித்திரையிலும் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

தொகுப்பாளர் கோபிநாத்தை பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்த நமக்கு அவருடைய அண்ணன் ஒரு நடிகர் தான் என்பது தெரியுமா?

கோபிநாத்தின் அண்ணன் பெயர் பிரபாகரன் சந்திரன். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவரின் கோபிநாத்தும் ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க