Neetu Chandra Plan
Neetu Chandra Plan

Neetu Chandra Plan – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடுத்த பில்டப்பை ஈடு செய்ததா அவெஞ்சர்ஸ்? படம் எப்படி இருக்கு?

அண்மையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவுக்கு வந்தது.

இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் மிரட்டியிருப்பதாக பாராட்டியிருந்தார். மேலும் அஜித் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்றும் டிவிட்டர் வாயிலாகவே அவர் விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள நடிகை நீத்து சந்திரா, “ அஜித் பாலிவுட்டில் நடிப்பது பாலிவுட்டுக்கு ஒரு ஆசீர்வாதம் போல. அந்த படத்தில் நானும் நடிக்கவேண்டும்” என கூறினார்.

ஏற்கனவே மங்காத்தாவில் ராய் லக்ஷ்மி ரோலில் முதலில் நடிக்க வேண்டியது இவர்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அப்போது விட்ட வாய்ப்பை இப்ப பிடிக்கலாம் என நினைகிறார் போல.

Neetu Chandra Plan
Neetu Chandra Plan