Marvel Studios
Marvel Studios

Avengers Endgame :

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இமாலய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு திரைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேறெந்த ஹாலிவுட் படத்துக்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் 450 திரையரங்குகளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் வெளியாகி முன்னணி தமிழ் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான வரவேற்பை அவெஞ்சர்ஸ் பெற்றுள்ளது.

தல தல தான்… கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய விஸ்வாசம் – முழு விவரம் இதோ.!

கடந்த ஆண்டு வெளியான இன்ஃபினிட்டி வார் படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் இன்பினிட்டி கற்களை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் இருக்கும் பாதி மக்களை தானோஸ் அழித்துவிட, மறைந்துபோனவர்களை அவெஞ்சர்ஸ் குழு எப்படி மீட்டெடுத்து வருகிறார்கள் என்பதையே இந்த பாகம் விவரிக்கிறது.

அவெஞ்ர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் இப்படத்தில் ஆக்‌ஷனை விடவும் உணர்வுப்பூர்வமான காட்சிகளே பிரதான இடம் பிடிக்கின்றன.

குறிப்பாக யாரும் எதிர்பாரா அந்த கிளைமாக்ஸ் திருப்பம், ஒட்டுமொத்த மார்வெல் ரசிகர்களையும் நெகிழ வைக்கின்றன.

தமிழகத்தில் இப்படத்தை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியையும் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியாவையும் டப்பிங் பேசவைத்துள்ளனர்.

இதில் விஜய் சேதுபதியின் டப்பிங் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையும் ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதமாக இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

தமிழகத்தில் முன்பதிவில் மட்டுமே 40 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் முதல் வார முடிவில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு வெளியான இன்ஃபினிட்டி வார் திரைப்படம் இந்தியா முழுவதும் 280 கோடி வரை வசூல் செய்து இந்தியளவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் எனும் சிறப்பை தக்கவைத்திருக்கும் நிலையில் அந்த சாதனையை இந்த பாகம் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.