விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர் போன சேனலாக இடம் பிடித்துள்ளது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் சேனலில் காலை முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

வெகு விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் இரண்டு மூன்று சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளன. இந்த நிலையில் தற்போது இயக்குனர் தாய் செல்வம் பெயரில் புதிதாக உதயமாகி உள்ள தாய் கிரியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக உள்ளது.

தெலுங்குவில் காற்றுக்கென்ன வேலி நடிகர் சுவாமிநாதன் ஹீரோவாக நடித்து வரும் Nuvvu Nenu Prema சீரியல் ரீமேக் ஆக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு நீ நான் காதல் என தலைப்பு வைத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.