நயன்-விக்கி தம்பதியினரின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல நட்சத்திர தம்பதியினர்களில் ஒருவராக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ்சிவன் தம்பதியினர். கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் அழகான புகைப்படத்தை பதிவிட்டு ஜெய்லர் திரைப்படத்தில் அவர் எழுதிய ரத்தமாரே பாடலில் இருந்து “அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு, அமைவது அழகு.. அதிசயம் அற்புதம் அதுவே.. என்று” இடம்பெற்று இருக்கும் வரிகளை கேப்ஷனாக பதிவு செய்து பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் ஹார்டின் சிம்பலை குவித்து வருகின்றனர்.