நயன்தாரா நடிக்க இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Nayanthara Test movie motion poster viral:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தற்போது ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் “நயன்தாரா 75” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நயன்தாரா இயக்குனர் சஷிகான் இயக்கத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோருடன் இணைந்து உருவாக இருக்கும் “டெஸ்ட்” திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை YNOT studios யூடியூபில் வெளியிட்டுள்ளது . அது தற்போது வைரலாகி வருகிறது.

YouTube video