லவ் டுடே இயக்குனருடன் நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அதே சமயம் நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் லவ் டுடே படத்தில் இயக்குனரும் நடிகரான பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த படத்திற்கு எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. மேலும் அவர் பிரதீப் அக்காவாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.