எல்லாத்தையும் இழந்துட்டேன் என நயன்தாரா பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி பிறகு லேடி சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஐட்டம் ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான நயன்தாரா தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனது instagram பக்கத்தில் விக்னேஷ் சிவனை பின் தொடர்வதை நிறுத்தினார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று பெரிய போகிறார்கள் என்றெல்லாம் தகவல் பரவியது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவனை பின் தொடர்ந்தார்.
இந்த பரபரப்பு அடங்காத நிலையில் தற்போது ஐ அம் லாஸ்ட் என பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஏதோ ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காக செய்யும் யுத்தி எனவும் பலர் கருத்துக்கூறி வருகின்றனர்.