ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை பின்பற்றுவரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி உள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள தற்போது ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகைத்தாய் மூலமாக இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு கெத்தாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற பதிவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் ஒரே நாளில் நடிகை நயன்தாராவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டி சாதனை படைத்துள்ளார்.