Natpe Thunai
Natpe Thunai

Natpe Thunai :

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் நட்பே துணை. மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல்நாளில் மட்டும் மூன்று கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் முதல் வார முடிவில் 15 கோடி வரை வசூல் செய்தது.

நட்பே துணை படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம்!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இரண்டாம் வார முடிவில் இப்படம் 19 கோடி வரை வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.

இப்படத்தின் பட்ஜெட்டை மனதில்கொண்டால் இது மூன்று மடங்கு வசூல் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக ஹிப்ஹாப் ஆதி உருவெடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களில் விஸ்வாசம், பேட்ட, தில்லுக்கு துட்டு 2, தடம் படங்களுடன் இந்த படமும் இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here