Napoleon Problem With Vijay in Pokiri
Napoleon Problem With Vijay in Pokiri

விஜயால் ஏற்பட்ட அசிங்கத்தால் 13 வருடமாக அவருடைய படத்தை பார்க்காமல் இருந்து வருகிறார் பிரபல தமிழ் நடிகர் ஒருவர்.

Napoleon Problem With Vijay in Pokiri : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் போக்கிரி.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். நெப்போலியன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்தபோது நெப்போலியன் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விஜயுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.

விஜயும் பலமுறை நெப்போலியன் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இதே போல் செய்ததால் விஜய் கடுப்பாகி உள்ளார்.

இதனால் கேரவன் காவலாளியிடம் நெப்போலியனை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். அதையும் மீறி நெப்போலியன் உள்ளே சென்றபது உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா என அவரை கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உறவினர்கள் முன்பே வீதியால் அசிங்கப்பட்ட நெப்போலியன் அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக விஜய்யின் படத்தையே பார்க்காமல் இருந்து வருகிறாராம்.

அடுத்த நயன்தாரா இவர்தானா? வாய்ப்புகளை குவிக்கும் இளம் நடிகை!

மேலும் அவருடன் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவத்தை மறக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நெப்போலியன் தற்போது டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெப்போலியன் கலக்கல் சினிமாவிற்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் எனக்கு பிடித்தமான நடிகர்கள் என கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இடம் பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ

கண்டிப்பா நம்பர்.1 இடத்தை பிடிப்பாரு - Exclusive Interview With Napoleon | Tel K.Ganesan | LIVE | HD