Nallakannu watching Munthiri Kaadu Movie
Nallakannu watching Munthiri Kaadu Movie

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு நல்லகண்ணு ஐயா அவர்களுடன் நடிகர் சோமு முந்திரிக்காடு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டு மகிழ்ந்தார்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் முந்திரி காடு திரைப்படத்தை அடையாறில் உள்ள NFDC தியேட்டரில் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் சிறப்புக் காட்சியாக பார்த்தார். படத்தை பார்த்த அவர் பட குழுவினரை மனதாரப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் இயக்குனர் மு களஞ்சியம் அவர்களை பார்த்து வரலாறு படைத்து விட்டீர்கள் தம்பி என்று மனம் நெகிழ கூறினார்.

படத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களையும் பாராட்டிய மூத்த தலைவர் திரு ஐயா நல்ல கண்ணு அவர்கள், குறிப்பாக படத்தில் பால்ராஜ் எனும் கேரக்டரில் நடித்த நடிகர் சோமுவை தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இது போன்ற அனுபவம் மிக்க ஒரு அரசியல் மூத்த தலைவரிடம் இருந்து பாராட்டு பெற்றது தன் பாக்கியம் என நடிகர் சோமு தெரிவித்துள்ளார்.