நெட்டிசன்களை கடுமையாக எச்சரித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நகுல் மனைவி.

Nakul Wife Warning to Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தேவயானி. இவருடைய தம்பிதன் நகுல். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

காதலில் விழுந்தேன் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். ஆனால் வாய்ப்புகள் தொடர்ந்து சரியாக அமையவில்லை. மேலும் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

இவருக்கு திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் அகிரா என்ற மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய மகளின் புகைப்படத்தை நகுல் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இதனால் ரசிகர்கள் அகீராவுக்கு என தனி ஃபேன் பேஜ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

எனக்கு 274 Degree Celsius-ல “வயிறு எரியுது”…, கடுப்பான Vignesh Shivan..! | Beast | Trending | News

இந்த ஃபேன் பேஜை நீக்குமாறு ஏற்கனவே நகுல் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் ஸ்ருதி ரசிகர்களுக்கு காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைதியா சொல்லும்போது கேட்டுக்கோங்க. மைனர் குழந்தைகளுக்கு பேன் பேஜ் உருவாக்குவது குற்றம். உங்களது குழந்தைக்கு தொடங்காமல் எங்களது குழந்தைக்கு தொடங்குவது ஏன்? உடனடியாக அதனை நீக்கி விடுங்கள் என கூறியுள்ளார். மேலும் ஒரு ஃபேன் பேச்சு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள அவர் இது ஃபேக் எனவும் குறிப்பிட்டுள்ளார்.