Nakhul in BB5

பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கப் போகும் பிரபல நடிகர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Nakhul in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கி உள்ளது. அதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனமான எண்டோமால் சைன் நிறுவனம் இறங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கப் போகும் நடிகர்.. இவர் பிரபல நடிகையின் தம்பியாச்சே.!!

பிக் பாஸ் சீசன் 5-ஐ யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது. கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருப்பதால் இந்த சீசனை சிம்பு தொகுத்து வழங்கலாம் எனவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. மேலும் போட்டியாளர்களாக பிரபலங்களையும் உள்ளே அனுப்புவதற்காக பலரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கப் போகும் நடிகர்.. இவர் பிரபல நடிகையின் தம்பியாச்சே.!!

அந்த நாட்டின் பிரபல நடிகையான தேவயானியின் தம்பியான நடிகர் நகுலிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நகுலுக்கு தற்போது பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்து வருவதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.