நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Naane Varuven Poster Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் வித்தியாசமான 2 கெட்டப்பில் இருக்கும் இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில் பலரும் இதனை கலாய்த்து வருகின்றனர்.

காரணம் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ஒரு கெட்டப் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கெட்டப் வடசென்னை படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/SalvaReviews/status/1492030266629816321?t=0g7KchY0HuGMR3fdi8A5qg&s=19
https://twitter.com/Vijay_Rasigan3/status/1492028658801733638?t=d3qnR5oA8n12rbBn_U2RvQ&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.