Mysskin in Upcoming Movie Update
Mysskin in Upcoming Movie Update

அடுத்த படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளார் மிஷ்கின்.

Mysskin in Upcoming Movie Update : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் விஷாலை வைத்து துப்பரிவாலன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிலிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து இந்த லாக் டவுன் காலத்தில் மொத்தம் 13 கதைகளை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் இவர் சிங்கமுத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மிஸ்கின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

செம ஹிட்டடிக்கும் என காத்திருந்த விஜய் சேதுபதி.. OTT ரிலீஸ் என அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்.!!

அந்த பதிவில் நண்பர்களே,

என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வருகின்ற செப்டம்பர் 20-ம் தேதி 00:00 AM மணிக்கு அறிவிக்கிறேன்.

அன்பு முத்தங்களுடன்,
மிஷ்கின் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மிஸ்கின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேசமயம் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்ற விவாதங்களிலும் ஈடுபட தொடங்கியுள்ளனர்.