என் கணவரை பற்றிப் பேசாதீர்கள்: நடிகை ப்ரியாமணி கடும் கொதிப்பு
‘இது எனது வாழ்க்கை. இதில் மதம், சாதி பற்றியெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்’ என கொதிப்படைந்துள்ளார் ப்ரியாமணி. இது பற்றிய விவரம் காண்போம்..
அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரியாமணி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தேசிய விருதும் பெற்றார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கில் சில படங்களில் நடித்தார். பின்னர், வாய்ப்புகள் முற்றிலும் நின்றிவிட்ட நிலையில், முஸ்தஃபா என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து செட்டிலானார்.
தொடர்ந்து தேடிய சினிமா வாய்ப்பில், திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். கடைசியாக மைடான், ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில் அவர் வருத்தம் கலந்த கோபத்தில் கூறியதாவது: ‘எனது நிச்சயதார்த்ததை நான் வெளிப்படையாக அறிவித்தேன். என்மீது அக்கறை கொண்டவர்கள், அதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், சிலரோ தேவையற்ற வெறுப்பு செய்திகளை பரப்பினார்கள். ‘லவ் ஜிஹாத்’ என்றெல்லாம் கூறினார்கள்.
நான் பிரபலம் என்பதால், எது வேண்டுமானாலும் சொல்வார்கள் என்று நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும், அந்தக் கருத்துகள் என்னை ரொம்பவே பாதித்தன.
என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனெனில் நான் திரைப்படத் துறையில் இருப்பவள். அவரை ஏன் சொல்ல வேண்டும். இதில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது கணவரை எதற்காக சொல்ல வேண்டும். அவர் யார் என்றுகூட உங்களுக்கு தெரியாது.
நிறைய செய்திகள் அதுகுறித்து வந்தன. அவை அனைத்துமே என்னை சில நாட்கள் ரொம்பவே பாதித்தன. இப்போதும்கூட நான் அவருடன் ஒரு புகைப்படம் போட்டால், வரும் கமெண்ட்ஸ்களில் பாதி எங்களது மதம் அல்லது சாதி பற்றியதாகவே இருக்கிறது’ என்றார். ப்ரியாமணியின் இந்த ஆவேச வார்த்தைகள் தற்போது வைரலாகி தெறிக்கிறது.