Muthalvan 2 : தளபதி விஜயை வைத்து முதல்வன் 2 படத்தை இயக்க உள்ளாரா? என்பது குறித்த தகவலை இயக்குனர் ஷங்கர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 2 பாயிண்ட் ஓ படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் முதல்வன் 2 படம் பற்றி பேசியுள்ளார்.
என்னை சுற்றி ஒரு கதை பார்ம் ஆகி என்னை தொந்தரவு செய்யும் போது நான் படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.
மேலும் அது அரசியல் படமா இருக்கலாம், சமூக கருத்துள்ள படமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் யாரை வைத்து படம் இயக்கினால் சரியாக இருக்குமோ அவர்களை வைத்து இயக்குவேன் எனவும் கூறியுள்ளார்.
அந்த நடிகர் ரஜினி சாராக இருக்கலாம். கமல்ஹாசன் சாராக இருக்கலாம் அல்லது விஜயாகவும் இருக்கலாம் எனவும் கூறியுள்ளர்.