நடிகை ஷாலினியின் பிறந்த நாளை முன்னிட்டு தல அஜித் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் தல அஜித் அவர்கள் தனது மனைவியும் கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையுமான நடிகை ஷாலினி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவர்களது இந்த அழகான ஃபேமிலி புகைப்படத்தை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி இணையதளங்களில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.