Mr Local Audio Release Date
Mr Local Audio Release Date

Mr Local Audio Release Date – சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் லைக்ஸ் பெற்ற டீசர் என்னும் புதிய சாதனையை மிஸ்டர் லோக்கல் டீசர் படைத்துள்ள நிலையில் டிரைலரும் பல சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.