சூர்யா கொடுத்த ஷாக், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் சூர்யா முகத்துல எவ்வளவு சந்தோஷம் இருக்கு பார்த்தியா, அவன் உள்ள வரும்போது பழைய சூர்யாவை பார்த்த மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதுக்கு எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று கோபமா பேசினீங்க இப்போ எமோஷனலா இருக்கீங்க என்று சுந்தரவல்லி கேட்க சரி விடு என்று சொல்லிவிடுகிறார்.சூர்யாவின் மாற்றத்தை நினைத்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

மாதவி மற்றும் சுரேகா இருவரும் ஏதோ திட்டத்தோட தான் அவ இந்த வீட்டுக்குள்ள வரா என்று அர்ச்சனாவை பற்றி பேசிக் கொண்டிருக்க அதனை அர்ச்சனா பார்த்துவிட்டு இவர்களிடம் வருகிறார். வந்தவுடன் எனக்கு பிறந்த நாள் என்று சொல்ற விஷ் பண்ண மாட்டீங்களா என்று கேட்க இருவரும் விஷ் பண்ணவுடன் தேங்க்ஸ் என சொல்லிவிட்டு கையில் இருக்கும் கேக்கை கொடுக்கிறார். பிறகு போவது போல் அப்படியே நகர்ந்து விட்டு திரும்பவும் பின்னாடியே வந்து இன்னும் ஒரு நாள்தான் இருக்கு அதுக்குள்ள எல்லா ஸ்வீட், சாக்லேட், கேக் எல்லாம் சாப்பிட்டுக்கோங்க அப்புறம் உங்களுக்கு இருக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அப்பாவ உங்க வீட்டு வேலைக்காரங்க கிட்ட மன்னிப்பு கேட்க வச்சிருக்கீங்க, அவரே ஒரு எக்ஸ் மினிஸ்டர் அதுவும் இல்லாம நெக்ஸ்ட் மினிஸ்டரா அவருதான் வரப்போறாரு அவர போய் மரியாதை இல்லாம பேசி இருக்கீங்க உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு என்று மிரட்டி விட்டு செல்ல சுரேகாவும் மாதவியும் கோபப்பட்டு ஏதாவது பண்ணனும் என்று பிளான் போடுகின்றனர்.

பிறகு சூர்யா அர்ச்சனாவை மாடிக்கு கூட்டிவர அங்கே சூர்யாவின் நண்பர்கள் இருக்க அவர்களிடம் இன்னைக்கு அர்ச்சனா ஓட பிறந்தநாள் என்று சொல்ல அனைவரும் பிறந்தநாள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இது மட்டும் இல்லாமல் சூர்யாவின் நண்பர் நீங்க இன்னைக்கு பார்ட்டியும் கொடுக்க போறீங்க என்று சொல்லி பாட்டு போட்டு கையில் சரக்குடன் டான்ஸ் ஆடிக்கொண்டு குடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனை மேலே வந்து பார்த்த மாதவியும் ,சுரேகாவும் கடுப்பாக சுரேகாவிற்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மாதவியிடம் இந்த கல்யாணத்தை நிறுத்த ஒரு ஐடியா மாட்டிருக்கு என்று சொல்ல அர்ச்சனா குடிக்கிறதை சொல்லுகிறார் அதான் நம்ம ஏற்கனவே அம்மா கிட்ட சொல்லிட்டோமே இப்ப திரும்பியும் சொல்லி என்ன ஆகப்போகுது என்று கேட்க அம்மா கிட்ட சொல்லிட்டோம் ஆனா அப்பா கிட்ட சொல்லல என்று சொல்ல மாதவியும் யோசிக்கிறார்.

Moondru Mudichu Today Serial Promo Update
Moondru Mudichu Today Serial Promo Update

ஆனா இது ஒர்க் அவுட் ஆகுமா என்று கேட்க கண்டிப்பா ஆகும் அம்மாக்கு எவ்வளவு வசதி முக்கியமோ அதே மாதிரி அப்பாவுக்கு சூர்யாவோட சந்தோஷம் தான் முக்கியம் என்று சொல்ல சரி பண்ணி தான் பாப்போம் நீ போய் அப்பாவ கூட்டிட்டு வா என்று சொல்ல சுரேகாவும் கூட்டி வருகிறார். அர்ச்சனா கையில் சரக்குடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து அருணாச்சலம் ஷாக் ஆகிறார். இது மட்டும் இல்லாமல் இதோட நாலு ரவுண்டு போயிட்டு இருக்கு பா சூர்யாவோட அதிகமா குடிக்கிறா. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குடிச்சிட்டு இருந்தா வீட்ல சந்தோஷம் எப்படி இருக்கும் இவ காலையில் காபி எல்லாம் போட மாட்டா கட்டிங் தான் போடுவா என்றெல்லாம் அருணாச்சலத்திடம் சொல்ல அவர் யோசிக்கிறார். இப்ப கூட ஒன்னும் அர்ஜென்ட் இல்லப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும்னு இல்ல. மேலும் இதனால சூர்யாவோட டிப்ரஷன் குறையணும்னு நினைக்கிறீங்களா? கண்டிப்பா அதிகமா தான் ஆகும் என சுரேகாவும்
மாதவியும் மாத்தி மாத்தி பேசி அருணாச்சலத்திடம் கொளுத்தி போட அவர் டென்ஷனாக கீழே இறங்கி விடுகிறார்.

அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் வந்து நாளைக்கு காலைல கல்யாணத்தை வச்சுக்கிட்டு சரக்கும் கையுமா இந்த பொண்ணு இப்படி இருக்கிறது. சரியா படல என்று சொல்ல உடனே மாதவி, கரெக்டா சொன்னீங்கப்பா அவ பால் காசறதுக்கு முன்னாடியே ஒரு கட்டிங் போட்டு வந்து தான் பண்ணுவா, அது மட்டும் இல்லாம ரெண்டு பேரும் ஈவினிங் குடிச்சிட்டு தள்ளாடிவிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு நம்போ ஆஃபாயிலும் ஆம்லெட் வந்தா போட்டு தரணும் என்றெல்லாம் பேசி இன்னும் அருணாச்சலத்தை ஏத்தி விடுகின்றனர். உடனே அருணாச்சலம் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லுகிறார். உடனே மாதவி இப்பதான் பா வாழ்க்கையிலே கரெக்டான முடிவு எடுத்து இருக்கீங்க என்று சொல்ல சுந்தரவல்லி அதிக பிரசங்கித்தனமா பேசாத என்று மாதவியின் வாயை அடக்குகிறார்.

அருணாச்சலம் இதையெல்லாம் பார்த்துகிட்டு நீ எப்படி சும்மா இருக்க என்று சொல்ல மாதவி இந்த விஷயம் ஏற்கனவே அம்மாவுக்கு தெரியும் பா நாங்க வீடியோ காமிச்சோம். என்று சொல்ல அருணாச்சலம் இன்னும் அதிர்ச்சி அடைகிறார். உடனே சுந்தரவல்லி அவங்க ரெண்டு பேர் கிட்ட சொன்னது என்ன உங்க கிட்ட சொல்றேன் அவ பணக்கார வீட்டு பொண்ணு இது மாதிரி இருக்குறதுல பெரிய விஷயம் கிடையாது நாளைக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நம்ம வீட்டு பொண்ணா ஆயிடுவா. அதுக்கப்புறம் இந்த வீட்டு மருமக எப்படி இருக்கணுமோ அவ அப்படி நடந்துப்பா நான் நடத்தி வைப்பேன் என்று உறுதியாக சொல்லுகிறார். இப்பதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பழைய சூர்யாவை பார்த்த மாதிரி இருக்கு என்று சந்தோஷமா சொன்னீங்க அதுக்காக தான் என் பையன் ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா இருக்கா என்னோட பழைய சூர்யாவை பாக்கணும்னா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் என்று உறுதியாக சொல்லுகிறார்.

சூர்யா தனியாக படுத்துக்கொண்டு மாடியில் குடித்துக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மாதவி சுரேகா மற்றும் மாதவியின் கணவர் என மூவரும் வருகின்றனர். மாதவி சூர்யாவிடம் வந்து உன்னோட நல்லதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தத்துக்காக நாங்க அவ்வளவு சண்டை போட்டுட்டு இருக்கோம் ஆனா நீ அந்த அர்ச்சனாவை லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா நாங்க இப்படி பண்ணி இருக்க மாட்டோம். உங்க மாமனார் எக்ஸ் மினிஸ்டர் என்று சொன்னவுடன் மயங்கிட்டியா, உனக்கு அம்மா பண்ண துரோகம் எல்லாம் உனக்கு ஞாபகம் இல்லையா உனக்காக எவ்வளவு சம்பந்தத்தை நிறுத்தி இருக்கோம் தெரியுமா. நான் அர்ச்சனாவ தான் லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா நாங்க ஏன் இப்படி பண்ண போறோம்.அந்த சிங்காரத்தை தள்ளுனா எங்களுக்கு என்ன கொண்ணா எங்களுக்கு என்ன உனக்காக தான் அவங்ககிட்ட சண்ட போட்டோம் இந்த கல்யாணத்தை நிறுத்த தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கோம். நான் அந்த மினிஸ்டர் கிட்ட மன்னிப்பு கேட்டது கூட எனக்கு பெருசா தெரியல என என் தம்பிக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் என்றெல்லாம் பேச சூர்யா சத்தமாக சிரிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் கட்டண தாலியோட அவளை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று மாதவி சுரேகாவிடம் சூர்யா சொல்லுகிறார். நந்தினி கல்யாணத்திடம் என்ன அண்ணே நீங்களே இப்படி பண்றீங்க முதலாளி விட்டு கல்யாணம் நம்ப தான நல்லா நடத்திக் கொடுக்கணும் என்று சொல்லுகிறார்.

அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லி பாத பூஜை கொடுக்க நிற்க ஐயரிடம் உங்க கால கூட வையுங்க ஆனா இவங்க கால டச் பண்ண மாட்டேன் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்திருந்து கொள்வோம்.

Moondru Mudichu Today Serial Promo Update
Moondru Mudichu Today Serial Promo Update