சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, நந்தினி எடுத்த முடிவு ,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அனைவரும் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் வெளியில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க அருணாச்சலம் உள்ளே விசாரிக்க நீங்க நாலாவது டோக்கன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லுகின்றன. லேட்டானா நம்ப வேணா இன்னொரு நாளைக்கு வரலாமா டாடி என்று கேட்க அதெல்லாம் கொஞ்ச நேரத்துல முடிஞ்சதும் இன்னைக்கே முடிச்சிடலாம் என்று சொல்லுகிறார். பிறகு அருணாச்சலத்தை கூப்பிட்டு பொண்ணு பையன் டீடைல் எழுதிட்டு காசு கட்டிடுங்க என்று சொல்ல அவர் கொடுக்கிறார்.
அந்த இடத்தில் அர்ச்சனா விற்கு தெரிந்தவர் ஒருவர் பார்த்து விட எதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை விசாரித்துவிட்டு உடனே எங்க அர்ச்சனா அம்மாக்கு துரோகம் பண்ணா விட்ருவோமா என்று சொல்லி உடனே அர்ச்சனாவிற்கு போன் போடுகிறார். இங்கே குடும்பமாக சூர்யாவிற்கும் நந்தினிக்கும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண காத்துக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். அப்போ சுந்தரவல்லிக்கு தெரியாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் சொல்ற வரைக்கும் அங்க ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண விடாம ஏதாவது பண்ணு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து யாரும் இல்லாததை பார்த்து புஷ்பாவை கூப்பிட்டு எல்லாரும் எங்க போயிருக்காங்க என்று கேட்க எப்ப போனாங்க யாரெல்லாம் போயிருக்காங்க என்று கேட்க நீங்க போன உடனே கிளம்பிட்டாங்க என்று சொல்ல காலில் இருந்து இவங்க பண்ணது எதுவுமே சரி இல்லை என்று யோசிக்கிறார். பிறகு சுந்தரவல்லி நடந்ததெல்லாம் யோசித்துப் பார்த்து இதில் ஏதோ ஒன்று தப்பா இருக்கு என்று யோசிக்கிறார். உடனே சுந்தரவல்லி அருணாச்சலத்திற்கு போன் போட அவர் எடுக்காமல் இருக்கிறார் உடனே மாதவிக்கு போட எடுக்காத ஏதாவது வீட்ல போய் சொல்லி சமாளிச்சுக்கலாம் என்று அவரையும் போனை கட் பண்ண சொல்லுகிறார்.
அர்ச்சனா சுந்தரவல்லிக்கு தெரிந்தவர் மூலம் ரெஜிஸ்ட்ரேஷன் விஷயத்தை போன் பண்ணி சொல்ல வைக்கிறார். அருணாச்சலம் உங்க பையன், மருமக ,பசங்க எல்லாரும் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்ல இருக்காங்க அங்க விசாரிக்கும்போது கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண வந்ததா சொல்றாங்க என்று சொல்ல உடனே கோபமான சுந்தரவல்லி சரி நான் அப்புறம் பேசுறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். மாதவி என்னப்பா இன்னும் லேட் ஆகுது என்று சொல்லி கேட்க தெரியவில்லைம்மா நானும் தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். நந்தினியும் வேலைக்கு டைம் ஆகுது என்று யோசிக்கிறார். உடனே அருணாச்சலம் வாங்க உள்ள போகலாம் என்று அழைத்து செல்கிறார். அவர்கள் உள்ளே சென்றதும் இருவரும் போட்டோக்களை ஒட்டி கையெழுத்து கேட்கின்றனர்.
உடனே நந்தினிக்கு சந்தேகம் வந்து நீங்க கல்யாண பண்ண நினைக்கிறவங்க எல்லாம் வராங்க இது நிலம் ரிஜிஸ்ட்ரேஷனா? இல்ல கல்யாணம் ரிஜிஸ்ட்ரேஷனா? என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா எல்லாம் ஒரே இடத்தில் தான் நடக்கும் நீ போய் கையெழுத்து போடு என்று சொல்லி அனுப்ப, நந்தினி அந்த பேப்பர் எல்லாத்தையும் எடுத்து பார்த்த பிறகு கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண கூட்டிட்டு வந்து இருக்கீங்களா என்று கேட்கிறார். எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் நீ முதல்ல கையெழுத்து போடு என்று சொல்ல உடனே வேகவேகமாக உள்ளே வந்த சுந்தரவல்லி நந்தினி கையில் இருக்கும் பேப்பரை வாங்கி படித்து பார்த்து கிழித்து நந்தினியின் முகத்தில் தூக்கி போடுகிறார்.
எல்லாரும் பிளான் பண்ணி கூட்டு களவாணித்தனம் பண்ணி இருக்கீங்களா? நீ எவ்வளவு நாளா இதை பண்ணீங்க என்று கேட்ட பிறகு நீங்க ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கோங்க எனக்கு பிரச்சனை இல்ல ஆனா அந்த வீட்டுக்கு நீங்க திரும்ப வரும்போது, அந்த வீட்டில நான் இருக்கணுமா? இல்லை இவன் இருக்கணுமா?என்று முடிவு பண்ணிக்கோங்க என்று சொல்லி கோபமாக சென்று விடுகிறார். உடனே நந்தினி என்கிட்ட சாட்சி கையெழுத்து போடணும்னு தானே கூப்பிட்டீங்க. ஆனா நீங்க இப்படி எல்லாம் நடக்குது நான் உங்கள எவ்வளவு நம்பினேன் நீங்களும் என்ன ஏமாத்துறீங்களா. எல்லாமே திட்டம் போட்டு தான் செய்றீங்க கடைசியா விஜி அக்காவும் என்னை ஏமாத்திட்டாங்க என்று அழுகிறார். எனக்கே தெரியாம என்கிட்ட சொல்லாம இத பண்ணனும்னு நினைக்கிறீங்களா என்று கேட்க மாதவி சுரேகா இருவரும் உன்னோட நல்லதுக்காக தான் நாங்க இதை பண்றோம் என்று சொல்லுகின்றனர். ஆனால் அருணாச்சலம் இது எல்லாத்தையும் பண்ணது நான்தான், என் மேல இருந்த நம்பிக்கை உனக்கு சுத்தமா போயிருக்கும் ஆனா இந்த வீட்ல என்னோட மருமகளா உன்னை இருக்க வைக்க எனக்கு வேற வழி தெரியல என்று சொல்ல சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இந்த குடும்பத்தில் இருக்கிறவங்களோட தேவையும் சுயநலமும் எனக்கு எதிராக நிக்குது. ஒவ்வொரு முறையும் செய்யாத தப்புக்கு ஒரு குற்றவாளியா நான் இங்க நிக்கிறேன்.
இது எல்லாத்துக்கும்மான முடிவ நான் இன்னைக்கு இங்க கொண்டு வரப்போற என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.