Web Ads

விஜி கேட்ட கேள்வி,தயங்கி நிற்கும் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 28-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 28-02-25

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் காரில் வந்து வீட்டுக்கு இறங்க எங்க வீட்ல யாரையும் காணோம் கார் எதுவும் காணம் என்று கேட்க சுந்தரவல்லி அம்மா, மாதவி அம்மா, சுரேகா அசோகன் அய்யா எல்லாரும் ஷாப்பிங் பண்ண போயிருக்காங்க என்று சொல்ல ஆமா இவங்களுக்கு போட்டுக்க துணிமணி செருப்பு எதுவுமில்லை அதனால ஷாப்பிங் பண்ண போயிருப்பாங்க என்று சொல்லி கோபப்படுகிறார். சின்னையா மேல இருக்காரு நந்தினி அம்மா கடைக்கு போய் இருக்காங்க என்று சொல்ல நந்தினியை கடைக்கு அனுப்ப வேண்டாம் என்று எவ்வளவு நாள் சொல்றது என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து விஜி மற்றும் விவேக் இருவரும் அருணாச்சலத்தை சந்தித்து பேசுகின்றனர்.

என்ன விஷயம்பா என்று கேட்க, ரொம்ப நாளா நானும் விஜியும் வெளியே போகணும்னு ஆசைப்பட்டோம் ஆனால் ஒரு ஷாப்பிங் மால்ல ஷாப்பிங் பண்ணும் போது எங்க பேர் குலுக்கல் விழுந்து ஈசிஆர் ரெசார்ட்ல நாலு நாள் தங்க வாய்ப்பு கிடைச்சிருக்கு சாப்பாடு எல்லாமே பிரீ சார்  அதனால ஒரு நாலு நாள் லீவு தேவைப்படுது மேடம் கொடுக்க மாட்டாங்க அதனால தான் உங்ககிட்ட கேட்க வந்தேன் என்று சொல்ல, தாராளமா போயிட்டு வாங்க நான் பேசுகிறேன் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் முகத்தில் ஒரு தயக்கம் இருக்க விஜி வேணானா சொல்லுங்க நாங்க போகல என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா இந்த வீட்ல கூட தான் ஒருத்தன் இருக்கான் பொண்டாட்டி எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போகலாம் வரலாம் எதுவும் கிடையாது. உடனே விவேக் எங்க கூடவே நாங்க அவங்கள கூட்டிட்டு போகட்டுமா என்று கேட்க கண்டிப்பா சூர்யா அனுமதிச்சா கூட்டிட்டு போயிட்டு வாங்க என்று சொல்ல நான் சம்மதிக்க வைக்கிறேன் என்று விவேக் உள்ளே வருகிறார்.

உடனே விஜி விவேக்கை நிறுத்தி அவர் சொன்னதுல உங்களுக்கு அர்த்தம் புரிந்ததா என்று கேட்க புரியலையே என்று சொல்லுகிறார். ஊருலகம் இருக்கிற மாதிரி அவங்க பையனும் குடும்பம் குழந்தை சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுறாரு என்று சொல்ல எனக்கும் புரியுது நான் சும்மா சொன்னேன் என்று சொல்லுகிறார். எல்லாத்தையும் மீறி நம்மளுக்காக எவ்வளவோ உதவி பண்ணி இருக்காங்க. அதையும் மீறி நான் உயிருக்கு போராடிகிட்டு இருக்கும்போது என் நண்பன் ரத்தம் கொடுத்து காப்பாத்தி இருக்கான் என்று சொல்லுகிறார். உடனே விஜி அவங்கள எப்படியாவது சம்மதிக்க வைத்து அங்க கூட்டிட்டு போகணும், எப்படியாவது அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கணும் என்று சொல்ல குழந்தை லெவலுக்கு இப்ப யோசிக்க வேண்டாம் முதலில் அவனை சம்மதிக்க வைப்போம் என்று உள்ளே வருகின்றனர். சூர்யா ரூமில் பரபரப்பாக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க எங்க கிளம்ப போற மச்சான் என்று கேட்கிறார். ஆமா இப்ப எனக்கு உடம்பு சரி ஆயிடுச்சி என்று சொல்லி விட்டு, அதெல்லாம் விடு அந்த சரக்கு சரக்கே இல்ல அது கபச குடிநீர் மாதிரி இருந்தது. ஆனா இப்போ அப்படி இல்ல நான் பழைய சூர்யாவா ஃபார்முக்கு வந்துட்டன். அப்போ திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா என்று கேட்க வீட்ல ஒரே ஒரு சரக்கு இருந்தது அதைப் புடிச்சு எனக்கு போதை ஏறிடுச்சு அதை என்ஜாய் பண்ண பாண்டிச்சேரி போறேன் என்று சொல்லுகிறார்.

நேரா பாண்டிச்சேரி போற தெகட்ட தெகட்ட குடிச்சிட்டு என்ஜாய் பண்ண போறேன் என்று சொல்ல எப்ப போனாலும் என்னை கூப்பிடாம போக மாட்டேன் இப்ப ஏன் என்ன கூப்பிடல என்று கேட்கிறார். நீ இப்பல்லாம் ரொம்ப அட்வைஸ் பண்ற, அதனால நீ வேணா நான் தனியாவே போய்க்கிறேன் என்று சொல்லுகிறார்.விவேக் சூர்யாவிடம் அது எப்படி மச்சான் நீ மட்டும் தனியா போவ நான் ஒரு பிளான் வச்சிருக்கேன் என சொல்லுகிறார். என்ன என்று சூர்யா கேட்க நானும் விஜியும் ரெசார்ட்க்கு போய் நாலஞ்சு நாள் ஸ்டே பண்ணி ஜாலியா இருந்துட்டு வரது தான் பிளான்  என்று சொல்லுகிறார். உடனே சூர்யா சூப்பர் போயிட்டு வாங்க என்று சொல்லுகிறார். அது எங்களுக்கு தெரியாதா? நீயும் கூட வரணும் பாண்டிச்சேரிதானே போற அப்படியே எங்க கூட வந்துடு என்று கூப்பிடுகிறார்.

நீங்க ரெண்டு பேரும் எதுக்கு போவீங்கன்னு எனக்கு தெரியும் அங்க போய் பருப்பு சாதம் சாம்பார் பாயாசம் எல்லாம் சாப்பிட்டு தூங்குங்க எனக்கு அது தேவையில்லை எனக்கு சரக்கு தான் வேணும் அது நீங்க போற ரெசார்ட்ல கிடைக்குமா என்று கேட்கிறார். உடனே விவேக் எந்த ரெசார்ட்ல இப்போ சரக்கு இல்லாமல் இருக்கு அது எல்லாமே வகைவகையாக கிடைக்கும் என்று சொல்ல அப்போ ஓகே போகலாம் என முடிவெடுக்கிறார். உடனே விஜி நானும் தான் வரேன் என்று சொல்ல ஓகேன்னு சொல்லிட்டேனே என்று சொல்லுகிறார். நீங்க ரெண்டு பேரும் குடிச்சுட்டு பேசிகிட்டு இருப்பீங்க எனக்கு போர் அடிக்கும் என்று சொல்ல அப்ப நாங்க மட்டும் போயிட்டு வருவோம் என்று சொல்லுகிறார். அவசரப்படாதீங்க நான் மட்டும் தனியா இருப்பேன் நந்தினி வந்தா கூட பேசிகிட்டு இருப்பா இல்ல அதனால நந்தினி கூட்டிட்டு போகலாம் என்று விஜி சொன்னவுடன் சூர்யா இதுவும் நல்ல ஐடியா தான் நந்தினி அந்த எடுத்துக்கெல்லாம் போயிருக்க மாட்டா சரி நீ போய் சீக்கிரமா நந்தினியை ரெடியாக சொல்ல ஏற்கனவே டைம் ஆயிடுச்சு எனக்கு சொல்லி அனுப்பி வைக்கிறார். விவேக்கிடம் கண்டிப்பா நான் குடிக்கிற சரக்கு அந்த ரெசார்ட்ல இருக்கோம்ல என்று சொல்லுகிறார். அப்படி இல்லன்னா உன்ன சாவடிச்சிடுவேன்டா என்று சொல்லி திட்டுகிறார்.

விஜி கிச்சனில் நந்தினியை தேட கடைக்குப் போய்விட்டு நந்தினி வர வந்தவுடன் சந்தோஷமாக விசாரிக்கிறார். இப்ப என்ன பண்ண போற என்று கேட்க சமைக்கனும் என்று சொல்லுகிறார். அதைவிட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு எப்ப பாத்தாலும் வீட்ல தானே இருக்க நம்ம எல்லாரும் சேர்ந்து ஒண்ணா வெளியில் போயிட்டு வரலாம் என்று சொல்ல கோவிலுக்கா என்று கேட்கிறார் எப்பவுமே கோவிலுக்கு தானா நம்ம வெளிய போகலாம் வெளிய நா ரொம்ப வெளிய எல்லாம் இல்ல மகாபலிபுரத்தில் இருக்கிற ஒரு ரெசார்ட்க்கு போகலாம் என்று சொல்ல நான் வரலை என்று சொல்லுகிறார். ஏற்கனவே இங்க பிரச்சனை மேல பிரச்சனை வருது இதுல அங்க வந்தா இன்னும் ஏதாவது பிரச்சனை வரும். எல்லாரும் ஒன்னா போறதுல என்ன என்று கேட்க அதுதான் பிரச்சனையே தனியா போறது இருந்தா கூட எனக்கு பிரச்சனை இல்ல இன்னும் அவரு அவங்க அம்மாவ வெறுப்பேத்தறதுக்காக பண்றேன்னு ஏதாவது பிரச்சனை பண்ணுவார் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் நடக்காது நான் இருக்கேன் இல்ல பாத்துக்கலாம் என்று விஜி சொல்ல இதையெல்லாம் கவனித்த கல்யாணம் எல்லா வேலையும் நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாமல் போயிட்டு வா, நீ எப்ப பாத்தாலும் அடம் பிடிக்காத அப்புறம் அண்ணன் கோபப்படுவேன் பாத்துக்கோ என்று சொல்லுகிறார். நீ இங்க இருந்தாலும் என்ன நடக்கும் யாராவது பேசுவாங்க நீ அழுவ என் மனசு கஷ்டப்படும் நீ போனாலும் போகல நாளும் திட்ட தான் செய்வாங்க நீ போய் நிம்மதியா இருந்துட்டு வா என்று சொல்லுகிறார். நந்தினி வேண்டாம்  வேண்டாம் என சொல்லிக் கொண்டே இருக்க விஜி வற்புறுத்தி அழைத்து செல்கிறார்.

அருணாச்சலத்திடம் விவேக் சூர்யா சம்மதித்து விட்டதாக சொல்ல எப்படி சம்மதித்தான் என்று சொல்ல அவன் ஆல்ரெடி பாண்டிச்சேரியில் போய் என்ஜாய் பண்ண கிளம்பிட்டான் என்று சொல்ல, அவனுக்கு குடிப்பதற்கு ஒரு காரணம் தேவை என்று அருணாச்சலம் கோபப்படுகிறார். விவேக்கிடம் சூர்யாவ பாத்துக்கோ நந்தினியும் சூர்யாவும் சந்தோஷமாக இருக்கணும் என்று சொல்லுகிறார். இப்ப கிளம்புறதும் நல்ல விஷயம் தான் வீட்ல யாரும் இல்லை உடனே கிளம்பிடுங்க என்று சொல்ல அந்த நேரம் பார்த்து நந்தினியும் விஜியும் வருகிறார். விஜி அக்கா என்ன வெளியே கூப்பிடுறாங்க என்று சொல்ல போயிட்டு வாம்மா நீயும் வீட்டுக்குள்ளேயே தானே இருக்க என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் கிளம்ப கல்யாணம் ஸ்னாக்ஸ் டப்பாவை கையில் கொடுக்க, இன்னும் ஒரு அரை மணி நேரம் இருந்தா எலுமிச்சை சாதம் செஞ்சிருப்பேன் என நந்தினி சொல்லுகிறார் அருணாச்சலம் போறது சந்தோஷமா இருக்க அங்க போய் ஜாலியா இருங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு நால்வரும் காரில் கிளம்ப அருணாச்சலம் மற்றும் கல்யாணம் டாட்டா காட்ட அருணாச்சலம் கல்யாணத்திடம் கைய ஆட்டுவது  போதும் எங்க போயிருக்காங்கன்னு சொல்லணும் என்று கேட்க கோவிலுக்கு என்று சொல்ல அருணாச்சலம் சரியான சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நான்கு பேரும் சாப்பிட உட்கார மெனு கடை பார்த்து நந்தினி இதுல ஒன்னுமே புரியலையே நம்ம ஏதாவது சொல்ல போய் வேற ஏதாவது கொண்டு வந்துட்டா என்ன பண்றது என்று யோசிக்கிறார்.

மறுபக்கம் நந்தினி விஜி ரூமில் தயங்கி நின்று கொண்டிருக்க விஜி என்ன ஆச்சு சூர்யா அண்ணன் ஏதாவது சொன்னாரா என்று கேட்கிறார் நான் இன்னும் சூர்யா சார் ரூமுக்கு போகல என்று சொல்ல அவரு உன்னோட புருஷன் அப்புறம் எதுக்குத்தான் எங்கயும் நின்னுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 28-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 28-02-25