நந்தினிக்கு வந்த பிரச்சனை, காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update
மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் பிரபு விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார். மறுபக்கம் சூர்யா நெருப்பிலிருந்து வெளியில் வர முடியாததால் ஆதிரையை போக சொல்லுகிறார். ஒரு வழியாக சூர்யா நெருப்பிலிருந்து வெளியில் வந்து கேசவனிடம் சண்டை போடுகிறார். உடனே சமபந்தி விருந்தில் பிரபு சாப்பிட்ட விஷயத்தை ராஜா தம்பியிடம் சொல்ல குடும்பத்தினர் பதறிப் போய் வருகின்றனர். சூர்யா கேசவன் கையை கட்டி நெருப்பு வளையத்தில் தள்ளி விடுகிறார். பிரபு கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்குப் போக குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சூர்யா ஒரு பக்கம் ரத்த வாந்தி எடுக்க பிரபு மறுபக்கம் ரத்த வாந்தி எடுக்கிறார். ஆதிரை யாராவது வாங்க என்று கூப்பிட இருவர் வந்து ஆம்புலன்ஸ் வண்டிக்கு சூர்யாவை தூக்கி வர பிரபுவையும் ஆம்புலன்சில் ஏற்றுகின்றனர்.
மறுபக்கம் நந்தினி கடவுளுடன் இந்த வேண்டுதல் நிறைவேறி நான் சூர்யா சார் கையில் தாயத்து கட்ட வேண்டும் அவர் குடியை விட வேண்டும் அதை நீ தான் நடத்தணும் என்று வேண்டிக் கொள்ள சூர்யாவை ஆம்புலன்ஸில் படுக்க வைக்கின்றனர். மேகலை ஆதிரையை பார்த்து கூப்பிட ராஜா தம்பி நன்றி சொல்ல ஆதிரை நான் எதுவும் பண்ணல சூர்யா அண்ணா தான் உயிர பனைய வச்சு இத பண்ணாரு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல,வேல் விழி முதல்ல உன் புருஷன் எப்படி இருக்கான்னு பாரு என்று சொல்ல ஆதிரையிடம் ஆதிரை என்னாச்சு என்று ஆம்புலன்ஸை திறந்து பார்த்து கண்கலங்கி நிற்கிறார். பிரபுவின் அப்பா நடந்த விஷயத்தை ஆதிரையிடம் சொல்லுகிறார். உடனே ஆதிரை பூ குழி இறங்கும் இடத்திற்கு வந்து நிற்க நந்தினி பிரபு அண்ணனும் சூர்யா சாரும் எங்கே என்று எனக் கேட்க கண்கலங்கி அழுகிறார்.
அழாம என்ன நடந்தது என்று சொல்லுங்க என்று கேட்க ஆதிரை, நடந்த விஷயங்கள் அனைத்தையும் நந்தினி இடம் சொல்லுகிறார். உடனே நந்தினி கண்கலங்கி உன்ன நம்புனதுக்கு எங்களுக்கு தண்டனை கொடுக்கிறியா எங்க ரெண்டு பேர் தாலிக்கும் சோதனை கொடுக்கிறியா என்று கண்கலங்கி நிற்கிறார். உடனே ராஜா தம்பி இந்த இடத்துல யாருக்கும் எதுவும் ஆகாது நீங்க பூக்குழியில் இறங்குங்க எல்லாத்தையும் அவ பார்த்துப்பா என்று சொல்லுகிறார். நந்தினியும் ஆதிரையும் சாமி பாட்டுக்கு டான்ஸ் ஆட சூர்யா பிரபுவுக்கு ட்ரீட்மென்ட் நடக்க மறுபக்கம் மாதவி நந்தினிக்கு ஊற்றும் தண்ணீரில் பெட்ரோலை கலக்க கேசவன் கோபமாக அரிவாள் உடன் வருகிறார். உடனே ஒவ்வொருவராக கையில் தீச்சட்டி ஏந்தி பூக்குழியில் இறங்க மாதவி பெட்ரோல் கலந்த தண்ணீர் நந்தினி காலில் ஊற்றாமல் வேறு ஒரு தண்ணீர் ஊற்றுகின்றனர்.
இதனால் மாதவி கடுப்பாகி பார்க்கிறார். நந்தினி பூக்குழி இறங்கி நடக்க சூர்யா கண் முழிக்கிறார். உடனே ஆதிரை பூக்குழி இறங்கி முடிக்க பிறகு துவா பாப்பா தீ மிதிக்கிறார். உடனே திருடன் தீ மிதிக்க வர மாதவி கலந்திருந்த பெட்ரோல் தண்ணியை அவரது காலில் ஊற்ற திருடன் தீயில் இறங்கியவுடன் கால் எரிந்து விடுகிறது. மறுபக்கம் சூர்யாவும் பிரபுவும் கண் விழித்து விடுகின்றனர். சூர்யா டாக்டரிடம் ஆதிரைக்கும் துவா பாப்பாக்கும் ஒன்னும் ஆகல என்று கேட்க ஒன்னும் ஆகல அவங்க பூக்குழி இறங்கிட்டாங்க என்று சொல்லுகிறார். கேசவன் துவா பாப்பாவை முறைத்து பார்த்துவிட்டு துப்பாக்கியில் குறி வைத்து சுட அது நந்தினி கையில் இருக்கும் தீச்சட்டி மீது குண்டு பட்டு சட்டி கீழே விழுந்து உடைய அதில் நகைகள் இருக்கிறது.
ஆதிகேசவன் போலீஸ் பிடித்து போக திருடர்கள் நகையுடன் சிக்குகின்றனர். ஆனால் பொதுமக்கள் நந்தினியும் அவர்களது குடும்பமும் தான் திருடி இருக்காங்க என்று பழி போட திருடன் அனைவரிடமும் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். அந்த பொண்ண விட்ருங்க அந்த பொண்ணு திருடல அவங்கள குற்றம் சொன்னா ஏன் கால் மாதிரி அவங்க நாக்கும் அழுகி போயிடும் என்று சொல்லி அழுகிறார். குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட பிறகு அம்மனுக்கு நகைகள் செலுத்தி தீபாரதனை செய்கின்றனர். உடனே மாதவி என்ன பண்ணாலும் நந்தினி ஜெயிச்சுட்ரா என்று சொல்ல சுந்தரவல்லி எங்க இருந்தாலும் அங்க தானே வரணும் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே அருணாச்சலம் சூர்யாவிற்கு தாயத்து கட்ட வேண்டும் என்று சொல்ல, குடிச்சிருக்காரு இப்ப கட்ட முடியாது அடுத்த வருஷம் வர சொல்லுங்க கட்டிடலாம் என்று சொல்ல துவா பிரபுவிற்கும் சூர்யாவிற்கும் முத்தம் கொடுக்கிறார். பிறகு ஆதிரையும் நந்தினியும் வந்து தனியாக பேசுகின்றனர். நான் எப்படியாவது தாயத்து கட்டிடலான நெனச்சேன் ஆனா இப்போ தெய்வத்தோட ஆசிர்வாதத்தை தான் திருப்பி எடுத்துட்டு போறோம் என்று சொல்லுகிறார். ஆதிரையும் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்திருக்கு என்று சொல்ல, சூர்யாவும் எனக்கும் ஒரு தங்கச்சி கிடைச்சிருக்கு என்று சொல்ல,பிரபுவும் எனக்கும் ரெண்டு தங்கச்சி இருக்காங்க மூணாவது நந்தினி கிடைச்சிருக்காங்க என்று சொல்லுகிறார். உடனே சூர்யா ஆதிரையிடம் இது மாதிரி கஞ்ச பையன் கூட எப்படி வாழ்கிற என்று கேட்க, பிரபு நந்தினியிடம் இது மாதிரி குடிகாரன் கூட எப்படி வாழறா என்று கேட்க, ஆதிரை சூர்யாவிற்கும் , நந்தினி பிரபுவிற்கும் ஆதரவாக பேசி ஒன்றாக சேர்ந்து விட பிரபு சூர்யாவும் சமாதானம் ஆகிவிடுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுரேகா சூர்யாவோட பொண்டாட்டி எந்த வேலையும் செய்யக்கூடாதாம் என்று சொல்ல, சுந்தரவல்லி நான் இந்த வீட்டோட வேலைக்காரி தான் என்று சொல்ல வேண்டியது தானே என நந்தினியிடம் கேட்கிறார்.
பிறகு நந்தினி காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு போக ரொம்ப நேரம் ஆகியும் வராததால் கல்யாணம் பதறி அடித்துக் கொண்டு என்ன ஆச்சு என்று தெரியவில்லை என அருணாச்சலத்திடம் சொல்ல அருணாச்சலம் சூர்யாவிடம் சொல்லுகிறார் நந்தினிக்கு என்ன ஆனது என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update