Web Ads

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில்,

‘லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன்.

‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் தயாரிப்பாளராகவே தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னாவை அணுகினேன். பிரசன்னா ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தார். ஆனால், நான் ஒரு தயாரிப்பாளராக தொடர்கிறேன் என்றேன்.

இந்தப் படம் முதலில் இருமொழிப் படமாக, இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் தயாரிக்கத் திட்டம். இந்தி பதிப்பிற்காக ஃபர்ஹான் அக்தருடனும், தமிழ் பதிப்பிற்காக சிவகார்த்திகேயன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இறுதி ஸ்கிரிப்ட் விவாதங்களின்போது, ​​நான் ஏன் இந்த வேடத்தில் நடிக்கவில்லை என ஒரு வலுவான உள் உணர்வை அனுபவித்தேன். பின்னர் சுமார் ஒரு வாரம் யோசித்த பிறகு, எனது நிலைப்பாடு குறித்து தெரிவித்தேன். மகிழ்ச்சியடைந்தார் பிரசன்னா. எனது மனமாற்றத்தை வெளிப்படுத்தினேன்.

அவருடன் பணிபுரியும் வாய்ப்புக்காக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாகக் காத்திருந்த இயக்குனர், இந்த வேடத்திற்கு அவர் உண்மையிலேயே சரியானவர் என்று அவரை நம்ப வைத்தார். ஃபர்ஹான் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு முன்னர் செய்யப்பட்ட உறுதிமொழியில் இருந்து பின்வாங்குவதில் ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், இறுதியில் அமீர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார்.

சிதாரே ஜமீன் பர், 2018 ஆம் ஆண்டு வெளியான சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்த படம் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

aamir khan reveals sivakarthikeyan choice for sitaare zameen par
aamir khan reveals sivakarthikeyan choice for sitaare zameen par