சூர்யாவுக்கு வந்த சந்தேகம், நந்தினி இடம் ஹரிதா கேட்ட கேள்வி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 21-02-26

moondru mudichu serial today promo update 21-02-26

நேற்றைய எபிசோடில் கல்யாணம் சூர்யாவை எழுப்பி கீழே கால பைரவர் வச்சு பூஜை எல்லாம் பண்றாங்க என்று சொல்லி அழைத்து வர குடும்பத்தினர் வந்து விடுகின்றனர் பரமுதான் இந்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க சுந்தரவல்லி வந்து பரமுவை திட்டுகிறார். ஏற்கனவே ஆப்பிளில் விஷம் வைத்தது போதாதா என்று கோபப்பட்டு முதல்ல போலீஸ கூப்பிடுங்க என்று கோபப்படுகிறார். ஒரு ஆப்பிளை சாப்பிட்ட அவருக்கு மட்டும் ஆபத்து ஆயிடுச்சுன்னா மீதி எடுத்துட்டு வாங்க நான் சாப்பிடுறேன் என்று சொல்லுகிறார். நீ வைக்காம ஆப்பிள விஷம் வைக்க முடியுமா என்று அருணாச்சலம் கேட்க அப்படியெல்லாம் பண்ண முடியுமா என்று நடிக்கிறார். அப்போ விஷம் எப்படி வந்தது என்று மாதவி கேட்க நான் என்ன ஆப்பிளையா விலைய வச்சு பரிச்சு எடுத்துட்டு வரேன் நானே வாங்கிட்டு வரேன் அவன் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு எதனா மருந்து கலந்திருப்பான் என்று சொல்லுகிறார். இப்பயும் என்னை நம்பலனா நானே போலீசுக்கு போன் பண்றேன் என்று சொல்ல, முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று மாதவி திட்ட நான் ஒரு விஷயம் சொல்றேன் சொல்லிட்டு போயிடுறேன் என்று சொல்லுகிறார். இப்போ இந்த வீட்டுல கல்யாணம் தானே நடக்க போகுது என்று கேட்கிறார்.

நீங்க வரதுக்கு முன்னாடி சாமிகிட்ட குறி கேட்டேன் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லுச்சு என்று சொல்ல சுந்தரவல்லி கோபப்பட்டு திட்ட, சுரேகா நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் என்று சொல்ல, சுரேகாவுக்கு கல்யாணம் நடக்கும் ஆனால் இந்தப் பையன் கூட நடக்குமான்னு தான் கேட்கிறேன் என்று சொல்லுகிறார். கால பைரவரை வைத்து ஒரு மண்டல பூஜையை செய்தால் உங்க தலைமுறையே நல்லா இருக்கும் என்று சொல்லுகிறார். சுந்தர வள்ளியின் அண்ணனும் இவங்க சொல்றதை கேட்கலாம் என்று சொல்லுகிறார். உங்க வீட்டில் கல்யாணம் நடக்கணும்னா 48 நாள் இந்த பூஜையை முடித்தீங்கன்னா எல்லாமே சந்தோஷமா நடக்கும் என்று சொல்லிவிட்டு பரமு சென்று விடுகிறார். உடனே சுந்தரவல்லி அண்ணன் நம்ம இந்த பூஜையை செய்யலாம் என்று சொல்ல, நந்தினி நான் ஒன்னு சொல்லட்டுமா என்று கேட்க, ஒன்னும் வேண்டாம் என்ற சுந்தரவல்லி சொல்ல அருணாச்சலம் நந்தினியை சொல்ல சொல்லுகிறார். சாமியை தூக்கி வீச வேண்டாம் சாமி எல்லாருக்கும் நல்லது தான் செய்யும் அந்த 48 நாள் பூஜையை நானே செய்கிறேன் என்று சொல்லுகிறார். அதேபோல் குலசாமி இடம் உத்தரவையும் கேட்கலாம் என்று சுந்தரவல்லி அண்ணன் சொல்ல அருணாச்சலமும் உத்தரவு கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து குடும்பத்தினர் கிளம்புகின்றனர்.

நீ பாட்டுக்கு அவங்ககிட்ட குறி கேட்க சொல்லிட்ட, அவங்க போய் குறி கேட்டு நல்லது சொன்னா என்ன பண்ணுவ என்று கேட்கிறார். அவங்க வரத்துக்காக தான் நான் இதை செஞ்சே அவங்க வரட்டும் அதை வச்சு அவங்களுக்கு என்ன செய்றன்னு பாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி குடும்பத்தினர் ஒன்றாக உட்கார்ந்த சாப்பிட்டுக்கொண்டு குலதெய்வ கோவிலுக்கு போகும் விஷயத்தைப் பற்றி பேசுகின்றனர் குடும்பமாக இரண்டு காரில் போயிடலாம் என்று அருணாச்சலம் சொல்ல வேண்டாம் நீங்க நானு அண்ணன் அண்ணி பொண்ணு மாப்பிள்ளை வந்தா போதும் என்று சொல்லுகிறார். சூர்யா வர வேண்டாமா என்று கேட்க, அண்ணனா இதுவரைக்கும் என்ன பண்ணி இருக்கான் அவன் வர வேண்டாம் என்று சொல்லுகிறார். இவர்கள் பேசுவதை வீடியோவில் பார்த்து பரமு சந்தோஷப்படுகிறார். அந்த சுந்தரவல்லி குடும்பமா கோவிலுக்கு வரப்போற அவளுக்கு ராஜ மரியாதையையும் பிரசாதத்தையும் கொடுத்து நான் அனுப்புறேன் என்று சொல்லுகிறார். மறுநாள் குலதெய்வ கோவிலுக்கு காரில் வரும்போது பரமு ஏற்பாடு செய்த அடியாளுக்கு போன் போடுகிறார். சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா என்று கேட்டுவிட்டு, வந்தவுடனே அடிச்சு நொறுக்கிடுவோம் என்று சொல்லுகிறார். காரில் இருந்து இறங்கரை எல்லாரையும் அடி வெளுத்து கட்டிடுங்க என்று சொல்லி போனை வைக்கிறார்.

நந்தினி குழப்பத்தில் நடந்து வர படிக்கட்டில் இருந்து தவறி விழப் போக சூர்யா பிடித்து விடுகிறார். என்னாச்சு நந்தினி என்று கேட்க, ஐயாவும் அம்மாவும் குலதெய்வ கோவிலுக்கு போயிருக்காங்களா அது ஏதோ மனசுக்கு சொல்லிக்கிட்டு இருக்கு, அந்தப் பரமேஸ்வரி தூண்டிவிட்டு தானே போயிருக்காங்க என்று சொல்ல, அவங்க சொல்லலனாலும் தாய்குலம் குலதெய்வ கோயிலுக்கு போயிருப்பாங்க என்று சொல்லுகிறார். என் மனசுல ஏதோ ஒரு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கு ஐயாவுக்கும் அம்மாவுக்கும் ஏதாவது பிரச்சனை வரும்னு பயமா இருக்கு என்று சொல்ல, சூர்யா அப்படியெல்லாம் எதுவும் இருக்காது என்ற சொல்லியும் நந்தினி நீங்க எதுக்கும் போய் பாருங்க என்று சொல்ல, சூர்யாவும் சம்மதிக்க நானும் வரேன் என்று நந்தினி சொன்னவுடன் போகலாம் என சந்தோஷமாக கிளம்புகின்றனர். குடும்பத்தினரும் கடந்த கால அனுபவத்தைப் பற்றி சந்தோஷமாக பேசிக்கொண்டு வருகின்றனர். அப்போது வழியில் மரக்கட்டைகள் இருக்க அருணாச்சலம் வண்டியை பாஸ்ட்டாக நிறுத்துகிறார்.

உடனே இறங்கி அருணாச்சலம் அந்தக் கட்டைகளை எடுத்து போட ரவுடி ஆட்கள் வந்து அருணாச்சலத்தை அடிக்கின்றனர். உடனே குடும்பத்தினர் வெளியில் வந்து தடுக்க, அவர்களையும் அடிக்க ரஞ்சித் அவர்களுடன் சண்டை போடுகிறார். ரவுடிகள் அவர்களையும் சேர்த்து அடித்துக் கொண்டே இருக்க, சூர்யா வந்து அனைவரையும் அடி வெளுத்து வாங்குகிறார். சூர்யா எப்படிம்மா இங்க என்று நந்தினி கேட்க எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு அதனாலதான் சூர்யா சர கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். பிறகு அவர்களை அடித்து விரட்டி விட்டு அங்கிருந்து குடும்பத்தினர் கிளம்புகின்றனர். கோவிலில் வந்து இறங்கியவுடன் பரமு வரவேற்க, சுந்தரவல்லி கடுப்பாகிறார். நீங்க வருவீங்கன்னு தெரியும் அதனால தான் உத்தரவு கேட்க பூசாரி கிட்ட சொல்லி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிட்டேன் என்று சொல்ல பூசாரி வந்தவுடன் சுந்தரவல்லி குலசாமி கிட்ட உத்தரவு கேட்கும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே பூசாரி பூஜை பொருட்களை வாங்கிக்கிட்டு வந்துட்டீங்களா என்று கேட்க சுந்தரவல்லி தயங்க நந்தினி நான் எடுத்துட்டு வந்துட்டேன் என்று சொல்லி தட்டுடன் சுந்தரவள்ளியுடன் கொடுத்த அவர் பூசாரியிடம் கொடுக்கிறார். பூசாரியும் பூஜை செய்துவிட்டு குறி சொல்ல உட்கார அப்போது கௌரி சத்தம் போடுவது நல்ல சகுனம் என்று சொல்லி சந்தோஷப்படுகின்றனர்.

பூசாரி சோழி போட்டு பார்க்க, ஒற்றைப்படையில் வந்திருக்கு இந்த கல்யாணத்தை எந்த தங்கு தடை இல்லாமல் சிறப்பாக செய்யலாம் என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் கரெக்டா வழியில் அடி ஆளை யாரும் அனுப்பி இருப்பாங்க என்று கேட்கிறார் மறுபக்கம் சுந்தரவல்லி எப்பவுமே அவ என் அண்ணன் மகளுக்கு ஈக்வலா வர முடியாது என்று சொல்ல சூர்யா நந்தினி அழைத்துச் சென்று விடுகிறார்.

மறுபக்கம் ரூமில் ஹரிதா நந்தினியிடம் அப்போ உங்களுக்குள்ள எதுவுமே இல்லையா என்று கேட்க ரூமுக்குள்ள அவரவர் இருப்பார் நான் நானாக இருப்பேன் என்று சொல்ல பிறகு அவருக்கு காலை பிடித்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 21-02-26

moondru mudichu serial today promo update 21-02-26