Web Ads

சிங்காரம் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி, கோபப்பட்ட சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today PromoUpdate 21-01-25
Moondru Mudichu Serial Today PromoUpdate 21-01-25

நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வந்து நந்தினியை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போக குடும்பத்தினர் அனைவரும் பதறி கெஞ்சியும் போலீஸ் அவரை அழைத்துச் சென்று ஸ்டேஷனில் உட்கார வைத்து அந்த போலீஸ் என்ன காக்கி சட்டையை கழட்ட வச்சவல்ல நீ, திருப்பியும் நான் இங்கே வர எவ்வளவு கஷ்டப்பட்டு தெரியுமா இனிமே இந்த கேஸ்ல இருந்து நீ வெளியவே வர முடியாது பத்து வருஷம் உள்ள தூக்கி போட போறேன் என்றும் சிங்காரம் குடும்பத்துடன் வந்து ஆட்டோவில் இறங்கி உள்ளே போக வேண்டும் என்று கேட்கிறார். உடனே அம்மாச்சி என்னோட பேத்தி அப்படி பண்ணி இருக்க மாட்டா தயவு செய்து விட்டுருங்க என்று சொல்ல, விட்றதா ஜெயில்ல போட பார்த்துகிட்டு இருக்காங்க போய் உட்காருங்க என்று சொல்லி அனுப்புகின்றனர். அந்த நேரம் பார்த்து சூர்யா வர நீங்க எங்க போயிருந்தீங்க ஐயா என்று கேட்க நான் திருவிழால கார்ல உட்கார்ந்து குடித்துவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்ல உடனே ரஞ்சிதா அக்காவ விட மாட்டாங்க சார் பயமா இருக்கு என்று சொல்ல சரி இருங்க நான் கேட்கிறேன் என்று சூர்யா வருகிறார்.

சூர்யா வந்து பார்க்கணும் என்ற விசாரிக்க, என்ன கேஸ் போட்டு இருக்கீங்க என்ன விஷயம்னு சொல்லாம நீங்க, கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கீங்க எதுவுமே தெரியாத வரைக்கும் சொன்னா தான் தப்பு இல்லன்னு சொல்ல முடியும் உங்க பொண்டாட்டி எல்லாரும் முன்னாடியும் தான் இப்படி பண்ணி இருக்காங்க அதனால அவங்களுக்கு 10 வருஷம் தண்டனை கன்பார்ம் என்று சொல்லுகிறார். இப்போ என்னதான் பண்ண முடியும் என்று கேட்க, அதற்கு போலீஸ் அந்தப் பையன் அடிச்சு அடில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கா அவன் செத்துப் போயிட்டான்னா ஜெயிலுக்கு போறது தவிர வேற வழியில்லை, நாங்க என்ன பண்ண முடியும் என்று சொல்லுங்க என்று சொல்ல உங்களால ஒன்னும் பண்ண முடியாது நடக்கிறத வேடிக்கை மட்டும் பாருங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் பிரசிடெண்ட் மகனுக்கு ட்ரீட்மென்ட் நடக்க அந்த இடத்திலிருந்து சுதாகர் வெளியில் வந்து சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். உங்க அருமை தோட்டக்காரி இப்போ அவ உள்ள இருக்கா. என்ன பண்ணனுமோ எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டேன். அவளை கொலை கேஸ்ல உள்ள போடலாமா இல்ல கொலை முயற்சில போடலாமான்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க நீங்க உடனே வாங்க, என்று சொல்ல கண்டிப்பா நான் வருவேன் வந்து நான் பார்த்து சந்தோஷப்படாமயா என்று சொல்லி வந்து உங்க பையன கூட்டிட்டு போவீங்க வாங்க என்று சொல்ல அப்படி மட்டும் நடந்துருச்சுன்னா நான் உங்களுக்கு என்ன வேணா செய்வேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.

அருணாச்சலம் சூரியா இன்னும் போனே பண்ணலையே என்று யோசித்துக் கொண்டிருக்க உடனே சூர்யா போன் பண்ண எல்லாமே ஓகே தானே என்று அருணாச்சலம் கேட்க எதுவுமே ஓகே இல்ல டாடி இங்கே என்னென்னமோ நடக்குது என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க சூர்யா இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல என்று சொல்ல நானே மேனேஜ் பண்ணலாம்னு நினைச்சேன் டாடி ஆனா இதுல யார் யாரோ இன்வாலா இருக்காங்க எனக்கு ஒன்னும் புரியல நீங்க வாங்க என்று சொல்ல சரி நான் வரேன் என்று அருணாச்சலமும் கிளம்புகிறார். இல்லையென்றால் சுந்தரவல்லி சுதாகருக்கு ஃபோன் போட்டு என்ன நடக்குது என்று கேட்கிறார். எல்லாமே கரெக்டா போய்கிட்டு இருக்கு என்று சொல்ல உடனே சுந்தரவல்லி இந்த தோட்டக்காரிய ஒழுச்சி கட்ட இதுதான் சரியான நேரம் நான் கிளம்பி வரேன் என்ன நடக்குதுன்னு எனக்கு உடனுக்குடனே மட்டும் சொல்லுங்க என்று சொல்லி நான் வரேன் என்று போனை வைக்கிறார்.

மறுபக்கம் டாக்டர் ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டிருக்க பிரசிடெண்ட் டென்ஷனாக இருக்கிறார். நம்ம தம்பி மேல கை வெச்சி இருக்கா அவள ஏதாவது பண்ணனும் அவரு நல்லாகட்டும் அப்புறம் இருக்கு அவ குடும்பத்தையே காலி பண்ணிடலாம் என்று பேசிக்கொண்டிருக்க டாக்டர் வெளியே வந்தவுடன் மகன் குறித்து விசாரிக்கிறார். உங்க பையனுக்கு தலையில அடிபட்டதனால உசுருக்கு போராடிக்கிட்டு இருக்காரு அவரு உயிர் பிழைப்பாராக தெரிவதற்கு நாலு மணி நேரம் ஆகும் நாங்க அவரை காப்பாத்த போராடுவோம் என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகின்றனர்.

உடனே சுதாகர் பிரசிடண்டுக்கு போன் போட்டு என்ன பங்காளி இப்படி ஆயிடுச்சு என்று நலம் விசாரிப்பது போல் விசாரித்துவிட, பிரசிடெண்ட் இப்ப அவ எங்க இருக்காங்க என்று கேட்க குடும்பத்தோட ஸ்டேஷன்ல தான் இருக்காங்க என்று சொல்ல, என் பையனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அவங்கள குடும்பத்தோட தொலைச்சு கட்டிடுவேன் என்று போனை வைக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் ஒரு லேடி போலீஸ் நந்தினிக்கு டீ வாங்கிக் கொடுத்து பார்க்க நல்ல பொண்ணு மாதிரி இருக்க எப்படி என்று கேட்க என் தங்கச்சி கிட்ட வம்பு இழுத்தான் அதுனால நான் துரத்தி அடிச்சது உண்மைதான் ஆனால் நான் இப்படி பண்ணல என்று சொல்ல சரி விடுமா நடக்கணும்னு இருந்திருக்கு நடந்துருச்சு என்று சொல்லுகிறார்.

ஆமா பிரசிடெண்ட் பைய ரொம்ப மோசமானவன்னு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். என் தங்கச்சி கிட்ட அப்படி பண்ணதுனால தான் நான் அடிச்சேன் என்று சொல்ல அதற்கு அந்த போலீஸ் நீ அங்க பாதுகாப்புக்கு நின்னு இருந்த போலீஸ் கிட்ட சொல்லி இருக்கலாமே என்று சொல்ல எனக்கு அந்த நேரத்துல எதுவுமே தோணலக்கா என்று சொல்ல சரி எல்லாமே சரியாகிவிடுவோம் என்று நம்புவோம் என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் நான் போய் என் புள்ள கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன் என்று சொன்னார் வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிட்டு வரவா என்று கேட்க அதெல்லாம் வேணாம் நீங்க போங்கப்பா என்று சொல்லி அனுப்ப சூர்யாவும் வந்து நான் பண்ண வேண்டியது எல்லாம் பண்ணிட்டேன் நந்தினி காலைல கூட்டிட்டு வந்துடலாம் நீங்க குடும்பத்தோட வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டு சூர்யா போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்து கொள்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லியிடம் நாங்க செருப்பவே இருந்துட்டு போறோம் ஆனா உங்க பையனை வளைச்சு போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு சொன்னீங்க இல்ல அது மட்டும் என்று பேச அருணாச்சலம் கொஞ்ச நேரம் அமைதியாயிருமா என்று நந்தினி சொல்லுகிறார்.

உடனே சுந்தரவல்லி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க என்று சொல்ல நந்தினியை பண்ணாத தப்புக்காக அரஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க காப்பாத்த வேண்டாமா என்று சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் பையனோ போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்னு உண்ணாவிரதம் நடத்துங்க என்று சொல்லுகிறார்.

இவ அந்தப் பையன அடிச்சது ஊரே வேடிக்கை பார்த்து இருக்கு, தப்பு பண்ணலன்னு சொன்னா எப்படி என்று கேட்க அதெல்லாம் பொய் சுந்தரவல்லி இங்க என்னமோ நடந்திருக்கு என்று அருணாச்சலம் சொல்லுகிறார் நீயும் ரெண்டு பொண்ணு பெத்தவ தானே என்று கேட்க சுந்தரவல்லி சிங்காரம் குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேச உடனே சூர்யா கோபப்பட்டு இவங்க இந்த இடத்தையே ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்காங்க போக சொல்லுங்க என்று கத்துகிறார் உடனே நந்தினி கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து இங்கிருந்து எல்லாருமே போயிடுங்க நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Moondru Mudichu Serial Today PromoUpdate 21-01-25
Moondru Mudichu Serial Today PromoUpdate 21-01-25