Pushpa 2

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update

நேற்றைய எபிசோடில் நந்தினி ரூம் பெருக்கி கொண்டிருக்க சூர்யா தூங்கி எழுந்து சரக்கு பாட்டிலை தேடுகிறார். பாதிதான குடிச்சேன் என்று தேடிப்பார்த்து சைடில் கைவிட அங்கு இருக்கும் பாட்டில்களையும் காணாமல் போக சூர்யா யோசிக்கிறார். உடனே இங்கே என்னோட சரக்கு பாட்டில் இருந்ததே எங்க என்று கேட்க நந்தினி தெரியாது என்று சொல்லிவிடுகிறார். பிறகு பாத்ரூம் மற்றும் கபோர்டு என அனைத்திலும் தேடிப் பார்த்துவிட்டு எங்கேயும் இல்ல நீயும் தெரியலன்னு சொல்ற என்று கேட்கிறார். மீண்டும் தேடிவிட்டு எங்கேயாவது ஒலிக்க வச்சிருக்கியா என்று கேட்க எனக்கு தெரியாது என்று நந்தினி ஒரே முடிவாக இருக்கிறார். மீண்டும் இங்கேதான் இருந்துச்சு என்னால குடிக்காம இருக்க முடியாது எனக்கு மண்டையை உடைந்துவிடும் போல எங்க என்று கேட்க நந்தினி தெரியாது என்று சொல்லி வெளியில் கிளம்பி வந்துவிடுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க மாதவியும் , சுரேகாவும் வருகின்றனர். என்னம்மா இங்க உக்காந்து இருக்கீங்க என்று கேட்க உங்களுக்காக தான் என்று சொல்லி, அவ வீட்டுக்கு வந்தப்போ என்கிட்ட என்ன சொன்னீங்க அவல துரத்தி அனுப்பிடுவேன் என்று சொன்னீர்கள் ஆனால் இப்போது ஜாலியா உலாத்திக்கிட்டு இருக்கா, எனக்கெனவோ நீங்க அவ்வளவு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி தோணுது என்று சொல்ல, அந்தத் தென்னை மட்டை இருக்கிறது எங்களுக்கும் தான் பிடிக்கல என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி அவளை டார்ச்சர் பண்ணனும் அத நான் பாக்கணும் என்று சொல்ல சுரேகா நாளைக்கு பண்ணிடுவோம் என்று சொல்ல அப்ப இன்னைக்கு என்ன என்று கேட்டு இருவரையும் அனுப்பி இப்ப நீங்க போய் நான் சொன்னதை செய்யறீங்க நான் இங்க உக்காந்து ரசிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கு புஷ்பா வர மதிய சமைக்க என்னகா இருக்கு என்று கேட்க முள்ளங்கியும், வெண்டைக்காயும் இருக்கு என்று சொல்லுகிறார்.அதற்கு நந்தினி முள்ளங்கி சாம்பார் வெண்டைக்காய் பொரியல் செஞ்சிடலாம் என்று சொல்ல அவரும் சரி என சொல்லி காய் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க நந்தினி காய்கறிகளை நறுக்க புஷ்பா பாத்திரம் தேய்கிறார்.

மாதவியின் சுரேகாவும் வீட்டுக்கு வெளியே வர அசோகன் நாட்டுக்கோழி முட்டையுடன் உள்ளே வருகிறார். உடனே டென்ஷன்னாக சுரேகா இங்க பிரச்சனை வேற என்று சொல்லி சுந்தரவல்லி சொன்னதையே அசோகனிடம் சொல்லுகிறார். உடனே மாதவி ஒன்னும் பிரச்சன இல்ல அவளை என்ன சொன்னாலும் பரவால்ல அவ வீட்டை விட்டு வெளியே போகணும்னு நினைச்சா சூர்யா கிட்ட சொல்லிட்டா போதும் அவளை கூட்டிகிட்டு வந்துருவான் என்ற பிளான் போடுகின்றனர்.சுரேகா ஒரு ஐடியா சொல்ல மாதவி சூப்பர் என சொல்லுகிறார். நந்தினி கிச்சனில் வேலை பார்க்க, சூர்யா வேக வேகமாக ஓடி வந்து என்னால குடிக்காம இருக்க முடியாது சொல்லு சொல்லு என்று வற்புறுத்தி கேட்டோம் எனக்கு தெரியாது சார் என்று சொன்னால் சூர்யா அங்கிருக்கும் பொருள்களை தட்டி விட்டும் கேட்கிறார். அப்போ நீ எடுக்கல உனக்கு தெரியாது அப்படித்தானே என்று கேட்கிறார். எனக்கு இப்பவே சரக்கு அடிக்கல எனக்கு நினைச்சு நேரத்துல அடிச்சு ஆகணும் அதனாலதான் என் பெட்ரூம்ல பாத்ரூம்ல இருந்து எல்லா இடத்துலயும் நான் சரக்கு பாட்டில் வெச்சிருக்கேன் என்று சொல்லுகிறார்.

உடனே அசோகன் வர பெட் ரூம்ல இருந்து பாட்டெல்லாம் எங்க என்று கேட்க அசோகன் எனக்கு தெரியாத மாப்ள என்று சொல்லி விடுகிறார். பிறகு போன் வர சூர்யா வெளியே கிளம்பி விடுகிறார். உடனே கிச்சனில் இருக்கும் புஷ்பாவை தனியாக அழைத்து மாதவி பேசுகிறார். சூர்யா குடிக்க முடியாமல் நண்பர்களுக்கு போன் கூட யாரும் போன எடுக்காமல் இருக்கின்றன.

சுந்தரவல்லி கோபமாக கீழே இறங்கி வர இவ்வளவு நேரம் ஆச்சு இதுதான் நீங்க பண்றதா உங்களுக்கெல்லாம் வாய் தான் என்று சொல்ல, மாதவி உங்களுக்கு சாப்பிட என்னமா வேணும் என்று கேட்கிறார் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்ல சுரேகா நாட்டுக்கோழி சூப் குடிக்கிறீங்களா என்று கேட்கிறார். எனக்கே தலை வலிக்குது கம்முனு இரு என்று சொல்ல அது போதும் இருமா என்று சொல்ல சுரேகா ஏய் தென்ன மட்ட என்று கூப்பிடுகிறார். நந்தினி வந்தவுடன் மூணு காபி மற்றும் கிரீன் டீ கேட்கிறார். எனக்கு கிரீன் டீ என்று தயங்க மாதவி போய் எடுத்துட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். நந்தினி எப்படி கிரீன் டீ போடுவது என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே கிச்சனுக்கு வர புஷ்பாவிடம் கேட்கிறார் கிரீன் டீ தான ஈசியா போடலாம் என்று சொன்னா அப்ப நீங்க போட்டுருங்க நான் காபி போடுறேன் என்று சொல்ல அதெல்லாம் இல்ல நான் சொல்லி தரேன் நீ போடு என்று சொல்லி பச்ச மொளகாவை எடுத்துக்கொண்டு வர சொல்லுகிறார் உடனே நந்தினி பச்சை மிளகாய் கிரீன் டீயா என்று யோசித்து நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவின் சரக்கு பாட்டிலை தூக்கி போட்டு நந்தினி உடைக்க கடுப்பான சூர்யா உனக்கு என்ன உரிமை இருக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்று கோபப்பட்டு கேட்கிறார். என் கழுத்துல திடீர்னு தாலி கட்டுனீங்களே அதுக்கு உங்களுக்கு என்ன சார் உரிமை இருக்கு என்று கேட்கிறார் நந்தினி.

நந்தினி காபி கொண்டு வந்து கொடுக்க மாதவி கிரீன் டீ அம்மா கிட்ட கொடு என்று சொல்ல சுந்தரவல்லி இடம் கொடுக்கப் போக அவர் அதை நந்தினியின் முகத்தில் எரிகிறார் இதனால் நந்தினி அதிர்ச்சி அடைந்து கண்கலங்குகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update