கோபப்பட்டு கத்திய சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நியாயப்படி பார்த்தா என்ன கல்யாணம் செட்டப் வரைக்கும் கூட்டிட்டு போனது நீங்க, அப்படிப் பார்த்தால் நான் தான் உங்க மேல கோபப்படனும் என்று சூர்யா சொல்லுகிறார். சிலருக்கு இந்த உலகமே அவங்களாலதான் சுத்துதுன்னு நெனப்பு நெனச்சது சாதிக்கணும்னு நினைக்கிறாங்க அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்? நம்ம போய் ரொமான்ஸ் பண்ணலாம் வா என்று நந்தினி அழைத்து செல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த அர்ச்சனா என்னால அதை தாங்க முடியல அவங்க ரெண்டு பேரும் கார்ல வந்து இறங்கும்போது அவன் பக்கத்துல நான் இருக்கணும் பா, என்று டென்ஷனாக கத்திக் கொண்டிருக்க மினிஸ்டர் மனைவி எதுக்குடி இப்ப கத்துர வெளியே வரைக்கும் கேட்குது என்று சொல்லி காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அர்ச்சனா காபி கப்பை தட்டிவிட்டு மீண்டும் கோபப்படுகிறார். ஏதாவது பண்ணனும் பா, என்று பேச இந்த கல்யாணத்து நாள எனக்கு தான் பெரிய அசிங்கம், அப்புறம் என்னப்பா அவங்களுக்கு ஏதாவது செய்யுங்க என்று சொல்லுகிறார். நீ என்ன நினைக்கிறியோ அது கண்டிப்பா நடக்கும் நான் உனக்கு செஞ்சே தீருவேன் என்று சொல்லி அர்ச்சனாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
நந்தினி வீடு துடைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுரேகா வருகிறார். மாதவி அதிர்ஷ்டம்னு வந்தா இவள மாதிரி வரணும், எங்கேயோ தென்னந்தோப்பில் இருந்தவர் இவ்வளவு பெரிய வீட்ல வந்து இருக்கா பாரு என்று சொல்லுகிறார். மாதவி தென்னை மட்டை என கூப்பிட நந்தினி திரும்பி பார்க்க உன்ன தான் இங்க வா என்று கூப்பிடுகிறார். அவ்வளவு பெரிய பங்க்ஷன்ல சூர்யா கூட ஜோடியா வந்து இறங்கறியே உனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும் என்று கேட்க சூர்யா சார் தான் என கூப்பிட்டாரு என்று சொல்லுகிறார். அதற்கு மாதவி அவன் சொன்னா என்ன எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இல்லை என்று சொல்லி இருக்கணும் என்று சொல்லுகிறார். நீ அங்க வந்ததுனால எங்க அம்மாவுக்கு இவ்வளவு பெரிய அசிங்கம் நடந்தது தெரியுமா. நீ இந்த வீட்ல ஒரு வேலைக்காரி என்பதை மறந்து விடக்கூடாது என்று மிரட்டி அனுப்புகிறார். சுரேகா வேண்டுமென்றே நந்தினி துடைத்துக் கொண்டிருந்த பக்கெட் தண்ணீரை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு தெரியாமல் விழுந்தது போல் இரண்டு பேரும் நாடகம் ஆடி சரிப்போ அவங்க தொடச்சிப்பாங்க என்ற கிளம்புகின்றனர் நந்தினியும் சரி என்று சொல்லுகிறார்.
கிச்சனின் கல்யாணமும் நந்தினியும் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் ஏம்மா டல்லா இருக்க என்று கேட்க அதை ஏன் நான் கேக்குறீங்க எல்லாம் சேரல தான் என்று சொல்ல, சின்னவரம்மா என்று கேட்க அவராலே தான் என்று சொல்லி அங்கு நடந்த விஷயங்களை கல்யாணத்திடம் சொல்ல ஏம்மா பொண்டாட்டிய வெளிய கூட்டிட்டு போலாம்னு சண்டை போட்டுட்டு இருக்காங்க ஆனா நீ அவர் கூட போனதுக்கு இப்படி பேசிட்டு இருக்க என்று சொன்ன அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார். உடனே சூர்யா நந்தினி இடம் நந்துமா எனக்கு ஆணியன் எல்லாம் போட்டு ஒரு ஆம்லெட் போட்டு கொடு என்று சொல்லுகிறார். நந்தினி இல்லை என்று சொல்ல சூர்யா இப்ப ஆம்லெட் போடுவியா மாட்டியா என்று கேட்கிறார். உடனே கிச்சனுக்குள் வந்த சூர்யா எனக்கு யாரும் எந்த ஹெல்ப்பும் பண்ண வேண்டாம் நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு இட்லி குண்டான எடுத்துக் கொண்டு வந்து அடுப்பு மீது வைக்க கல்யாணம் இதுல செய்யக்கூடாது ஐயா தோசை தவால தான் செய்யணும் என்று சொல்லி எடுத்து கொடுக்கிறார். ஒரு பிரேக் என்று சூர்யா திரும்பவும் குடிக்க இன்னைக்கு ஆம்லெட் போட்ட மாதிரி தான் என்று கல்யாணம் சொல்லுகிறார். பிறகு சூர்யா முட்டையை எடுத்துக் கொண்டு உடைக்க வர இன்னும் அடுப்பே பத்த வைக்கல ஐயா என்று சொல்ல சூர்யா பத்த வைக்கிறார். பிறகு முட்டையை அப்படியே தவாவில் மேலிருந்து போட அது ஏடாகூடமாக உடைந்து விடுகிறது. பிறகு வெங்காயம் கேட்கிறார் வெங்காயம் எடுத்து வெட்டுவதற்குள் ஆம்லெட் கருகி விடுகிறது.
சூர்யா கண் எரிச்சலுடன் வெங்காயம் வெட்டிக் கொண்டிருப்பதை புஷ்பா பார்க்கிறார். நந்தினி அடுப்பை அணைக்க நான் குக்கிங் பண்றது எதுக்கு டிஸ்டர்ப் பண்ற என்று சொல்லி கேட்க நானே உங்களுக்கு போட்டு தரேன் போங்க என்று சொல்லுகிறார். நான் முதலிலேயே கேட்டப்போ பண்ணல இல்ல நானே பண்ணிக்கிறேன் என்று சொல்ல சரி நீங்களே தான் பண்ணுங்க முதல்ல வெங்காயத்தை கட் பண்ணுங்க என்று சொல்லுகிறார். பிறகு ஒரு கப் எடுத்து கொடுத்து அதில் வெங்காயத்தை போடுங்க பிறகு பச்சை மிளகாய் கட் பண்ணி போடுங்க என்று சொல்லிக் கொடுக்கிறார் இதையெல்லாம் பார்த்து புஷ்பா கடுப்பாகிறார். பிறகு உப்பு போடணும் முட்டையை உடைத்து ஊத்தணும் என்று சொல்லுகிறார். உன்ன உடனே போட்டு கொடுக்கிறேன் என்று சுந்தரவல்லி இடம் சொல்லி அவரை கூட்டிவர சுந்தர வள்ளி நிற்பதை நந்தினி பார்த்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் சுந்தரவல்லியை பார்த்த சூர்யா நந்தினியிடம் இந்த வீட்ல இருக்குற எல்லாரும் வந்து உன்கிட்ட சமையல் கத்துக்க சொல்ற என்று சொல்லுகிறார்.
சுந்தரவல்லி கண்ணாடி முன் நின்று, கண் முன்னாடி உளாத்திக்கிட்டு இருக்கா அவல உன்னால ஒன்னும் பண்ண முடியலல கோபமாக பேசிக்கொள்கிறார். சுந்தரவல்லி யின் தோழி ஒருவர் வந்து கோலத்தை கலைத்துவிட்டு இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு நான் சொல்லி தரேன் அவளே துண்ட காணும் துணியும் காணும் ஓடிடுவா என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.